பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று டெல்லியில் உள்ள துவாரகாவில் ராம் லீலாவில் பங்கேற்றார்.
விழாவில் பேசிய பிரதமர், அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி, ஆணவத்திற்கு எதிராக பணிவு, கோபத்தின் மீது பொறுமை ஆகியவற்றின் வெற்றியின் திருவிழா விஜயதசிமி என்று கூறினார். உறுதிமொழிகளை புதுப்பிக்கும் நாள் இது என்றும் அவர் கூறினார்.
சந்திரயான் தரையிறங்கி சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த முறை நாம் விஜய தசமியைக் கொண்டாடுகிறோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த நாளில் சாஸ்திர பூஜை மரபைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் ஆயுதங்கள் அபகரிப்புக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை, மாறாக தற்காப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன எனறார். சக்தி பூஜை என்பது முழு படைப்பின் மகிழ்ச்சி, நல்வாழ்வு, வெற்றி மற்றும் மகிமைக்காக வாழ்த்துவதாகும் என்று அவர் கூறினார். இந்தியத் தத்துவத்தின் நித்திய மற்றும் நவீன அம்சங்களை அவர் வலியுறுத்தினார். “ராமரின் ‘மர்யதா’ (எல்லைகள்) மற்றும் நமது எல்லைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்” என்று பிரதமர் மோடி கூறினார்.
“ராமர் பிறந்த இடத்தில் கட்டப்படும் கோயில் பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பிறகு இந்தியர்களாகிய நம் பொறுமைக்கு கிடைத்த வெற்றியின் அடையாளமாகும்” என்று பிரதமர் கூறினார். அடுத்த ராம நவமி, ராமர் கோவிலில் பிரார்த்தனை செய்வது உலகம் முழுவதும் மகிழ்ச்சியை பரப்பும் என்று அவர் கூறினார். “பகவான் ஸ்ரீ ராமர் விரைவில் வரவிருக்கும் தருணம்”, பகவான் ராமரின் வருகை விரைவில் உள்ளது என்று பிரதமர் கூறினார். ராமசரித மானஸில் விவரிக்கப்பட்டுள்ள வருகையின் அறிகுறிகளை நினைவுகூர்ந்த பிரதமர், இந்தியாவின் பொருளாதாரம் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறுவது, நிலவில் இறங்குவது, புதிய நாடாளுமன்ற கட்டிடம், நாரி சக்தி வந்தன் அதினியம் போன்ற இதே போன்ற இப்போது இருக்கும் அறிகுறிகளை குறிப்பிட்டார். “இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாகவும், மிகவும் நம்பகமான ஜனநாயகமாகவும் உருவெடுத்து வருகிறது”, என்று அவர் கூறினார். ராமர் இதுபோன்ற நல்ல அறிகுறிகளின் கீழ் வருவதால், “ஒரு வகையில், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் அதிர்ஷ்டம் இப்போது உயரப் போகிறது” என்று பிரதமர் கூறினார்.
சமூகத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சக்திகள், சாதியம் மற்றும் பிராந்தியவாதம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பதிலாக சுயநலம் பற்றிய சிந்தனை ஆகியவற்றுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். “சமூகத்தில் உள்ள தீமைகள் மற்றும் பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவர நாம் உறுதியேற்க வேண்டும்”, என்று அவர் கூறினார்.
இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகளின் முக்கியத்துவத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். ராமரின் சிந்தனைகள் அடங்கிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். தற்சார்பு கொண்ட வளர்ந்த இந்தியா, உலக அமைதியின் செய்தியை வழங்கும் வளர்ந்த இந்தியா, அனைவருக்கும் தங்கள் கனவுகளை நிறைவேற்ற சம உரிமை உள்ள இந்தியா, மக்கள் செழிப்பு மற்றும் மன நிறைவை உணரும் வளர்ந்த இந்தியா. இதுதான் ராம் ராஜியத்தின் தொலைநோக்குப் பார்வை” என்றார்.
இந்த நிலையில், தண்ணீரை சேமித்தல், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல், தூய்மை, உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுத்தல், தரமான பொருட்களை தயாரித்தல், வெளிநாடு பற்றி சிந்திக்கும் முன் நாட்டைப் சுற்றிப்பார்த்தல், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல், சிறுதானியங்களை ஊக்குவித்தல் மற்றும் பின்பற்றுதல், உடற்தகுதி, இறுதியாக “ஒரு ஏழைக் குடும்பத்தின் சமூக அந்தஸ்தை அவர்களின் குடும்பத்தில் உறுப்பினராக்குவதன் மூலம் உயர்த்துவோம்” போன்ற 10 தீர்மானங்களை அனைவரும் எடுக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். “நாட்டில் அடிப்படை வசதிகள் இல்லாத, வீடு, மின்சாரம், எரிவாயு, தண்ணீர், சுத்திகரிப்பு வசதிகள் இல்லாத ஒரு ஏழை கூட நாட்டில் இருக்கும் வரை, நாங்கள் ஓயமாட்டோம் பணியும் தொடரும்” என்று பிரதமர் மோடி கூறி முடித்தார்.
***
ANU/AD/DL
Greetings on Vijaya Dashami! Speaking at a programme in Delhi. https://t.co/d7PSTPswL0
— Narendra Modi (@narendramodi) October 24, 2023
मैं समस्त भारतवासियों को शक्ति उपासना पर्व नवरात्र और विजय पर्व विजयादशमी की अनेक शुभकामनाएं देता हूं: PM @narendramodi pic.twitter.com/I0cts5TrZB
— PMO India (@PMOIndia) October 24, 2023
भारत की धरती पर शस्त्रों की पूजा किसी भूमि पर आधिपत्य नहीं, बल्कि उसकी रक्षा के लिए की जाती है: PM @narendramodi pic.twitter.com/iCeS1Rkwao
— PMO India (@PMOIndia) October 24, 2023
भगवान राम की जन्मभूमि पर बन रहा मंदिर सदियों की प्रतीक्षा के बाद हम भारतीयों के धैर्य को मिली विजय का प्रतीक है: PM @narendramodi pic.twitter.com/8z4VfySRX2
— PMO India (@PMOIndia) October 24, 2023
भारत आज विश्व की सबसे बड़ी democracy के साथ, सबसे विश्वस्त democracy के रूप में उभर रहा है: PM @narendramodi pic.twitter.com/oaQxN5wLTp
— PMO India (@PMOIndia) October 24, 2023
हमें समाज में बुराइयों के, भेदभाव के अंत का संकल्प लेना चाहिए: PM @narendramodi pic.twitter.com/1vcHZqbc8M
— PMO India (@PMOIndia) October 24, 2023
भारतवर्ष में शक्ति पूजा पूरी सृष्टि के सौभाग्य, आरोग्य, सुख, विजय और यश के लिए की जाती है। यही हमारी परंपरा और विरासत है। pic.twitter.com/Gs5JTndOMS
— Narendra Modi (@narendramodi) October 24, 2023
अयोध्या के राम मंदिर में भगवान श्री राम बस आने ही वाले हैं। यह पावन अवसर पूरे विश्व को हर्षित करने वाला होगा। pic.twitter.com/6p8Un81En7
— Narendra Modi (@narendramodi) October 24, 2023
विजयादशमी पर देशभर के अपने परिवारजनों से इन 10 संकल्पों के लिए मेरा आग्रह… pic.twitter.com/yQ18GnTAnS
— Narendra Modi (@narendramodi) October 24, 2023
विजयादशमी… बुराई पर अच्छाई की जीत का महापर्व। pic.twitter.com/n8bo22FErv
— Narendra Modi (@narendramodi) October 24, 2023