Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டுடே இன் செய்ஷெல்ஸ் செய்தித்தாளுக்கு பிரதமர் அளித்த பேட்டி


Seychelles Interview

Q1- உங்களுக்குப் பிடித்தமான சுற்றுலாத் தலம் எது ?

Answer:

இந்தக் கேள்விக்கு நன்றி.  இக்கேள்வி எனக்குப் பல்வேறு நினைவுகளை கொண்டு வருகிறது.
எனது வாழ்வில் 40 ஆண்டுகளுக்கும் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு மேலாக.    அமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் நான் இந்தியா முழுக்க பயணித்திருக்கிறேன்.   அந்த அத்தனை இடங்களும் சிறப்பானவையே.  அவை அனைத்தும் புதிய அனுபவங்களை விரும்புகிற அளவில் அளித்துள்ளன.

Q2- எந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை மாற்றியது ?  

Answer:

வாழ்க்கையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன.   ஒரே ஒரு அம்சம் மட்டுமே வாழ்க்கையை மாற்றி விட முடியாது.  வாழ்க்கைப் பயணம் புரட்சிகரமாக இருப்பதை விட ஒரு பரிமாண வளர்ச்சி என்று கூறலாம்.

எங்கள் கலாசாரம், அனைத்து பகுதிகளில் இருந்தும், பல்வேறு நூல்கள், பதிவுகள், ஞானிகளின் சிந்தனைகள், பல்வேறு ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து தொடர்ந்து கற்றுக் கொள்ள வைக்கிறது.   பல்வேறு தரப்பிலிருந்து பலதரப்பட்ட சிந்தனைகளைக் கேட்டறிந்து கற்றுக்கொண்டுள்ளேன்.   ஏராளமாகப் படிப்பேன்.   ஆரோக்கியமான புதிய சிந்தனைகள் எனக்கு மிகவும் உவப்பானவை.  

Q3- உங்கள் ஓய்வு நேரத்தை எப்படி செலவிடுகிறீர்கள் ?

Answer:

குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பணியைச் செய்து முடிப்பது எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது.   அதை விட எனக்கு மகிழ்ச்சியளிப்பது வேறு எதுவும் கிடையாது.

ஓய்வெடுத்தல் என்றால் ஒருவரின் சூழலை மாற்றுவது, வேலையிலிருந்து ஓய்வெடுப்பது, அல்லது பணியாற்றும் இடத்தை மாற்றுவது என்று பொருள் உண்டு.   பலர் இதை செய்கிறார்கள்.

என் அனுபவத்திலிருந்து யோகா கர்மாசு கவுஷல்யம் என்பதை நான் நம்புகிறேன்.    செய்யும் பணியை சிறப்பாக செய்வதே யோகா.   இத்தகைய விழுமியங்கள் எனக்கு மன நிறைவை தருகின்றன.  என்னுடைய பணியே எனக்கு மனநிறைவை தருகிறது.   அதுவே மிகுந்த திருப்தி அளிக்கிறது.  

PM India
Q4- உங்களுக்கு சமைக்கத் தெரியுமா ?

Answer:

தெரியும்.  எனது வாழ்வில் பெரும்பாலான நாட்கள் நான் ஒரு கண்டிப்பான வாழ்வையே வாழ்ந்துள்ளேன்.   எப்போதும் பயணம் செய்ய வேண்டி இருக்கும்.   இதன் காரணமாக நானே சமைத்துச் சாப்பிடுவது எனக்குப் பழக்கமாகி விட்டது.

எந்த பணியாக இருந்தாலும் அதைச் சிறப்பாக செய்ய வேண்டும் என்பது என் பழக்கம்.     சமையலையும் செய்து பார்த்துள்ளேன். ஆனால் தற்போது 15 அல்லது 20 ஆண்டுகள் ஆகி விட்டன.  ஆனாலும் நான் குஜராத் முதல்வராக இருந்தபோது ஒரு முறை செய்து பார்த்துள்ளேன்.

Q5- உங்களது நற்குணங்கள் என்ன என்று கூற முடியுமா ?

Answer:

எங்களது கலாசாரத்தின்படி, எங்களின் புனித நூல்களின்படி, புற உலகை எளிதாக அறிந்து கொள்ளலாம்.  ஆனால் தன்னை உணர்வது கடினமானது.  ஒரு மனிதன் தன்னை உணர்ந்து கொண்டால், இதற்கு மேல் கற்பதற்கு ஒன்றும் இல்லை.  அப்படி தன்னை உணர்ந்தவர், நான் என்ன கற்றுக் கொண்டேன் என்பதை தம்பட்டம் அடிப்பதும் இல்லை.

இப்போது கூட  நான் என்னைக் கண்டறிவதற்கான முயற்சியில் எனது நண்பர்களின் உதவியுடன் ஈடுபட்டுள்னேன்.   

Q6- உங்களது பொழுதுபோக்கு என்ன ?

Answer:

மக்களைச் சந்திப்பது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம்.   பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்கள் அனுபவங்களை கேட்டறிந்துள்ளேன்.   தனிமையில் இருப்பதும் எனக்கு பிடித்தமான விஷயம்.

Q7- இந்தியாவில் உங்களுக்கு பிடித்தமான இடம் எது ?

Answer:

இமாலயம்.

Q8- எந்த அரசியல்வாதியைக் கண்டு வியந்துள்ளீர்கள் ?

Answer:

இந்தியாவை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபபாய் பட்டேல் அவர்களை நான் மிகவும் மதிக்கிறேன்.

பகத் சிங் போன்றவர்களை மிகக் குறைந்த வயதில் அவர்களின் வீரத்திற்கும், தியாகத்துக்காகவும், மதிக்கிறேன்.
இந்தியர்கள் அனைவரின் மனசாட்சியை உலுக்கி, அவர்களைச் சுதந்திரப் போராட்டத்துக்காக ஒன்றிணைத்த மகாத்மா காந்தியை மதிக்கிறேன்.

என்னுடைய மனதில் நீங்கா இடம் பெற்ற எத்தனையோ ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள்.  அவர்களிடமிருந்து இந்த உலகை மேலும் வளமையானதாக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.   

Q9- உங்களின் பழமையான நினைவு எது ?

Answer:

இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் என்னுடைய சொந்த மாநிலத்தில் ஒரு சிறிய நகரத்தில் வளர்ந்த நினைவு இருக்கிறது.   நான் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறக்கவில்லை அதனால் வளரும்போது நான் அனுபவித்த கஷ்டங்கள் நினைவில் உள்ளன. என்னுடைய தகப்பனாரின் கடையில், ரயில்வே நிலையத்தில் நான் தேநீர் விற்றது நினைவில் உள்ளது.   நம் நாடு போரில் இருந்தபோது, ராணுவ வீரர்களுக்கு தேநீர் வழங்கியது நினைவில் உள்ளது.   நானும் எனது நண்பர்களும் சேர்ந்து உணவு விடுதி ஒன்றை அமைத்து, அதில் கிடைத்த வருவாயை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியது நினைவில் உள்ளது.

Q10  உங்களுடைய சிறந்த சக்தி என்ன ?

Answer

என்னுடைய சிறந்த சக்தியைப் பற்றி நான் சிந்திக்க வேண்டுமா என்ன ?   நாம் அனைவரும் நம் மேலே உள்ள ஒரு சக்தியின் பார்வையில் இருக்கிறோம்.  அந்த சக்தி என்ன ?   அது குறித்து எனக்கும் தெரியாது, உங்களிடம் விளக்கவும் இயலாது.

Q11- வாழ்க்கை உங்களுக்கு கற்றுக் கொடுத்த முக்கிய பாடம் என்ன ?

Answer:

என்னுடைய துன்பமான நேரங்களிலும், தொடர்ந்து பணியாற்றும் ஒரு இதயம், அனைத்துப் பணிகளையும் செய்யும் கரங்கள்.  

Q12- உங்களின் பிரதானமான அச்சம் என்ன ?

Answer:

நான் வாழ்வில் கடந்து வந்த பாதையில், அச்சத்துக்கு அதிக இடமில்லை.

ஆனால், என்னுடைய மனத்தில் என்னுடைய இறுதி மூச்சு வரை யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்ற எண்ணம் இருக்கிறது.  அது குறித்து நான் அச்சம் கொள்கிறேன்.

PM India
Q 13- பிறர் குறித்து உங்களுக்கு எரிச்சல் ஏற்படுத்துவது எது ?

Answer:

இயல்பாக எனக்கு கோபம் வருவதில்லை.  அது என்னுடைய பாணியும் அல்ல.   நான் ஏற்கனவே சொன்னபடி, ஒருவர் தன்னுடைய முழுத்திறனையும் வெளிப்படுத்தி பணியாற்றவில்லை என்றால் எனக்கு பிடிக்காது.   தோல்வியடைவதைப் பற்றி கவலைப்படக் கூடாது.  முழுமையாக முயற்சி செய்ய வேண்டும்.
இரட்டை நிலைப்பாடு எடுப்பவர்களையும் எனக்குப் பிடிக்காது.   ஒருவர் இயல்பாக உண்மைத் தன்மையோடு இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.   

Q14- நீங்கள் வளரும்போது என்னவாக வேண்டும் என்று நினைத்தீர்கள் ?

Answer:

நான் பிறந்து வளர்ந்த சூழலில், ஏழைகள் கனவு கூட காண முடியாது.   அதே நேரத்தில் ஒருவர் தனக்காக மட்டும் வாழக்கூடாது.  பிறருக்காகவும் வாழ வேண்டும் என்று நினைத்தேன்.   இருப்பினும் என்னுடைய விருப்பம் நிறைவேறுமா என்பதில் எனக்கு சந்தேகம் இருந்தது.    விதி என்னை எப்படியெல்லாம் அழைத்துச் செல்கிறதோ அப்படியெல்லாம் சென்றேன்.   அதே நேரத்தில் பிறருக்கு சேவை செய்யும் ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

Q15- உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது ?  ஏன் அத்திரைப்படம் பிடிக்கும் ?

Answer:

சாதாரணமாக எனக்கு திரைப்படங்கள் விருப்பம் ஏற்படுத்துவதில்லை.   இளைஞனாக இருந்தபோது, அந்த வயதுக்கே உரிய ஆர்வத்தால் படங்கள் பார்த்ததுண்டு.    அப்போது கூட பொழுதுபோக்குக்காக படம் பார்ப்பது எனது வழக்கம் அல்ல.   அத்திரைப்படங்களில் வாழ்க்கைக்கு தேவையான பாடங்களை அக்கதைகளில் தேடுவது என் பழக்கம்.   ஒரு முறை எனது சக மாணவர்களோடும், ஆசிரியர்களோடும் ஒரு திரைப்படம் பார்க்கச் சென்றேன்.

ஆர்கே நாராயணனின் நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட “கைட்” திரைப்படம் அது.    அத்திரைப்படத்தை பார்த்த பிறகு, எனது நண்பர்களோடு காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.  அத்திரைப்படத்தின் மையக்கரு என்னவென்றால், ஒவ்வொருவரும் தனது ஆத்மாவால் வழிநடத்தப்படுகிறார்கள் என்பதே.   ஆனால் நான் வயதில் இளையவனாக இருந்ததால் என் நண்பர்கள் என் வாதத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

Q16- உங்கள் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட்டால் அதில் யார் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் ?

Answer:

ஒவ்வொரு வாழ்க்கைக்கும் ஒரு தத்துவம் உண்டு.   நாம் சென்ற பிறகு நம்மை நினைவில் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏன் வருகிறது ?  அப்படி அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அது நமது பணி, நமது சேவை ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும். இந்த சேவையைத் தொடர்ந்து செய்யும் யாரும் எனது கதாபாத்திரமாக இருக்கலாம்.

Q17- காலச்சக்கரத்தில் பின்னோக்கிச் செல்ல வேண்டும் என்றால் எங்கே செல்ல விரும்புகிறீர்கள் ?

Answer:

இது ஒரு பழைய கேள்வி.   ஒவ்வொருவரும் தங்களது குழந்தைப் பருவத்தை ஆர்வத்தோடு நினைவு கூர்வார்கள்.   அந்த கள்ளங்கபடம் இல்லாத தன்மை, கவலையற்ற வாழ்க்கை, தெருவில் விளையாடி, குளத்தில் நீந்தும் ஒரு வாழ்க்கை.  

உங்களது வீடு திடீரென்று தீப்பற்றி எரிந்தால் எந்தப் பொருளைக் காப்பாற்ற நினைப்பீர்கள் ?

Answer:

என்னுடைய உடனடி எண்ணம் அந்த நெருப்பு பிற இடங்களுக்கு பரவி விடக் கூடாது என்பதே.   அதைச் செய்ய முடிந்தால், மீதம் உள்ளவை தானாகக் காப்பாற்றப்படும்.

உயிரோடு உள்ளவரோ, அல்லது இறந்தவரோ… மூன்று பேரை இரவு விருந்துக்கு அழைக்க வேண்டும் என்றால் யாரை அழைப்பீர்கள் ?

Answer:

நான் இயல்பாகவே ஆன்மீகக் காரணங்களுக்காக விரதம் இருப்பவன்.   அப்படியொரு வாழ்வில் உள்ளவர்களை சந்திக்க நேர்ந்தால் அவர்களைத்தான் அழைப்பேன்.   விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் மகரிஷி ரமண போன்றவர்கள்.  இரவு உணவு தேவைப்படாத உயர்ந்த மகான்கள் அவர்கள்.

Q20: உங்களுக்குப் பிடித்த மேற்கோள் ?

Answer:

எனக்குப் பிடித்த மேற்கோள் “சத்யமேவ ஜெயதே”  வாய்மையே வெல்லும்.