Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து


டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள காணொலி ஒன்றில், அணியின் சாதனையால் நாட்டு மக்கள் அனைவரும் பெருமிதம் கொள்வதுடன், அதன் செயல்திறனைப் பாராட்டுகிறது என்றும், ஒவ்வொரு போட்டியையும் அணியினர் வென்றதன் மூலம் இந்தப் போட்டியை இன்னும் முக்கியமானதாக்கினர் என்று கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“சாம்பியன்ஸ்!
நமது அணி டி20 உலகக் கோப்பையை தனக்கே உரிய பாணியில் நாட்டிற்குக் கொண்டு வருகிறது!
இந்திய கிரிக்கெட் அணியை நினைத்து பெருமை கொள்கிறோம்.
இந்தப் போட்டி வரலாற்றுச் சிறப்புமிக்கது.”

**************

AD/BR/KV