Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மூலம் இந்தியாவின் அனைவரையும் உட்படுத்திய பொருளாதாரத்தை உலக வங்கியின் ஜி20 ஆவணம் பாராட்டுகிறது


உலக வங்கியின் ஜி20 ஆவணத்தில் இந்தியா வெறும் 6 ஆண்டுகளில் அனைவரையும் உட்படுத்திய  பொருளாதார இலக்குகளை எட்டியுள்ளது, இல்லையெனில் குறைந்தது 47 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்ற உலக வங்கியின் கருத்தைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர்  கூறியிருப்பதாவது:

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மூலம் இயக்கப்படும் அனைவரையும் உட்படுத்திய  பொருளாதாரத்தில் இந்தியாவின் பாய்ச்சல் வேகம்!

உலக வங்கி @WorldBank தயாரித்த ஜி20 ஆவணம் இந்தியாவின் வளர்ச்சி குறித்து மிகுந்த ஆர்வம் ஏற்படுத்தும் தகவலைப் பகிர்ந்துள்ளது. இந்தியா வெறும் 6 ஆண்டுகளில் அனைவரையும் உட்படுத்திய  பொருளாதார இலக்குகளை எட்டியுள்ளது, இல்லையெனில் குறைந்தது 47 ஆண்டுகள் ஆகியிருக்கும்.

நமது வலுவான டிஜிட்டல் முறை பணம் செலுத்தும் உள்கட்டமைப்பு மற்றும் மக்களின் உணர்வுக்குப் பாராட்டுகள். விரைவான முன்னேற்றம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு இது ஒரு சான்றாகும்.

https://www.news18.com/india/if-not-for-digital-payment-infra-in-6-yrs-india-would-have-taken-47-yrs-to-achieve-growth-world-bank-8568140.html

***

ANU/AD/SMB/AG/KPG