மக்களை மையமாகக் கொண்ட ஆளுகை என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு வரைவு விதிகள்- 2025 முன்னுரிமை அளிக்கின்றன என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவின் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மக்களை மையமாகக் கொண்ட ஆளுகை தொடர்பான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு வரைவு விதிகள்- 2025 எவ்வாறு முன்னுரிமை அளிக்கின்றன என்பதை மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் (@AshwiniVaishnaw) விளக்கியுள்ளார். வளர்ச்சியையும் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையையும் ஊக்குவிக்கும்போது தனிநபர் தரவைப் பாதுகாப்பதை இந்த விதிகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.”
————-
TS/PLM/RS/DL
Union Minister, Shri @AshwiniVaishnaw explains how the Draft Digital Personal Data Protection Rules, 2025, prioritises India's commitment to citizen-centric governance. The rules aim to safeguard personal data while driving growth and inclusivity. https://t.co/Rghw5NIMXI
— PMO India (@PMOIndia) January 7, 2025