Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ரூ.14,903 கோடியில் விரிவுபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில்  கூடிய மத்திய அமைச்சரவை, டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விரிவுபடுத்த ஒப்புதல் அளித்தது. இதன் மொத்த செலவு ரூ.14,903 கோடியாகும்.

இது பின்வருவனவற்றை செயல்படுத்தும்:

எதிர்கால திறன்  திட்டத்தின் கீழ் 6.25 லட்சம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மறுதிறன் மற்றும் மேம்பட்ட திறன் கொண்டவர்களாக மாற்றப்படுவார்கள்;

தகவல் பாதுகாப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு கட்டம் (ஐஎஸ்இஏ) திட்டத்தின் கீழ் 2.65 லட்சம் நபர்களுக்கு தகவல் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

புதிய தலைமுறை ஆளுமைக்கான ஒருங்கிணைந்த மொபைல் பயன்பாடு (உமாங்)  தளத்தின் கீழ் 540 கூடுதல் சேவைகள் கிடைக்கும். தற்போது 1,700 க்கும் மேற்பட்ட சேவைகள் உமாங்கில் ஏற்கனவே கிடைக்கின்றன;

தேசிய சூப்பர் கம்ப்யூட்டர் இயக்கத்தின் கீழ் மேலும் 9 சூப்பர் கம்ப்யூட்டர்கள் சேர்க்கப்படும். இது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள 18 சூப்பர் கணினிகளுடன் கூடுதலாகும்;

செயற்கை நுண்ணறிவு இயக்கப்பட்ட பல மொழி மொழிபெயர்ப்பு கருவியான பாஷினி (தற்போது 10 மொழிகளில் கிடைக்கிறது), 8வது அட்டவனையில் இடம்பெற்றுள்ள  அனைத்து 22  மொழிகளிலும் வெளியிடப்படும்;

1,787 கல்வி நிறுவனங்களை இணைக்கும் தேசிய அறிவு வலையமைப்பை (என்.கே.என்) நவீனப்படுத்துதல்;

டிஜிலாக்கரின் கீழ் டிஜிட்டல் ஆவண சரிபார்ப்பு வசதி இனி எம்.எஸ்.எம்.இ மற்றும் பிற நிறுவனங்களுக்கு கிடைக்கும்;

 2/3 நிலை நகரங்களில் 1,200 ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்;

சுகாதாரம், விவசாயம் மற்றும் நிலையான நகரங்கள் குறித்த செயற்கை நுண்ணறிவின் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.

12 கோடி கல்லூரி மாணவர்களுக்கு சைபர் விழிப்புணர்வு வகுப்புகள்;

கருவிகளை உருவாக்குதல் மற்றும் தேசிய சைபர் ஒருங்கிணைப்பு மையத்துடன் 200 க்கும் மேற்பட்ட தளங்களை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட சைபர் பாதுகாப்புத் துறையில் புதிய முன்முயற்சிகள்

இன்றைய அறிவிப்பு இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும், சேவைகளுக்கான டிஜிட்டல் அணுகலை ஊக்குவிக்கும் மற்றும் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிக்கும்.

***

SM/ANU/PKV/KPG