Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டிக்கோயவில்மருத்துவமனையை துவக்கி வைத்த பிரதமர், நார்வுட் பகுதியில் உள்ள இந்திய வம்சாவளி தமிழர்களிடையேஉரையாற்றினார்.

டிக்கோயவில்மருத்துவமனையை துவக்கி வைத்த பிரதமர், நார்வுட் பகுதியில் உள்ள இந்திய வம்சாவளி தமிழர்களிடையேஉரையாற்றினார்.

டிக்கோயவில்மருத்துவமனையை துவக்கி வைத்த பிரதமர், நார்வுட் பகுதியில் உள்ள இந்திய வம்சாவளி தமிழர்களிடையேஉரையாற்றினார்.

டிக்கோயவில்மருத்துவமனையை துவக்கி வைத்த பிரதமர், நார்வுட் பகுதியில் உள்ள இந்திய வம்சாவளி தமிழர்களிடையேஉரையாற்றினார்.


இலங்கையின்மத்தியப் பகுதியில் உள்ள டிக்கோயாவில்இந்தியாவின் உதவியுடன் உருவாக்கப்பட்டமருத்துவமனையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். பிரதமர் மோடி அவர்களை வரவேற்க சாலையோரங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் காத்திருந்தனர். பின்னர் அவர் இலங்கையின் அதிபர், பிரதமர், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தலைவர்களின் முன்னிலையில் நார்வுட் பகுதியில் பெரும் எண்ணிக்கையில்கூடியிருந்த இந்திய வம்சாவளி தமிழர்களிடையேஉரையாற்றினார். பிரதமர் தனது உரையின்போது இந்திய வம்சாவளி தமிழின மக்கள் இலங்கைக்குஅளித்துள்ள பங்களிப்பு குறித்தும் இந்தியாவிற்கும்இலங்கைக்கும் இடையே நீண்டகாலமாக பகிர்ந்து கொண்டு வந்துள்ள பாரம்பரியத்தைப் பற்றியும் குறிப்பிட்டார்.

 

சிலோன் தொழிலாளர் காங்கிரஸ், தமிழர் முற்போக்குக் கூட்டணி ஆகிய அமைப்புகளின்பிரதிநிதிகளையும் பிரதமர் சந்தித்துப் பேசினார்.

 

இலங்கையின்மத்தியப் பகுதியில் வசித்து வரும் சுமார் 30,000க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்களிடையேபிரதமர் ஆற்றியஉரையின் முக்கிய பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளது:

 

இன்று இங்கே உங்கள் முன் இருப்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

 

உங்களின் அன்பான, உற்சாகமான வரவேற்புக்கு நான் மிகவும் நன்றி பாராட்டுகிறேன்.

 

இலங்கையின் மிகவும் அழகான இந்தப் பகுதிக்கு வருகை தந்துள்ள முதல் இந்தியப் பிரதமர் என்பது குறித்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.

 

அதேநேரத்தில் உங்களுடன் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்ததும் எனக்கு மிகுந்த பெருமை தருவதாகும்.

 

மிகுந்த வளமான இந்த நிலத்திலிருந்து உருவாகும் புகழ்பெற்ற சிலோன்தேயிலையைப் பற்றி உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் நன்கு அறிவார்கள்.

 

உலகம் முழுவதிலுமுள்ள பல லட்சக்கணக்கானவர்களின்விருப்பத்திற்குரியபானமாக விளங்கும் சிலோன்தேயிலையை உருவாக்கும் உங்களது வேர்வையைப் பற்றியும், உழைப்பைப் பற்றியும் அவர்களுக்கு அதிகமாகத் தெரியாது.

 

தேயிலை ஏற்றுமதியில்உலகத்தின் மிகப்பெரிய மூன்றாவது நாடாக இன்று இலங்கைவிளங்குகிறது எனில் அது உங்களின் கடினஉழைப்பினால்தான்.

 

உழைப்பின் மீதான உங்களின் ஆர்வத்தின்விளைவாகத்தான்தேயிலைக்கானஉலகத்தின்தேவையில் கிட்டத்தட்ட 17 சதவீதத்தைஇலங்கைவினால் பூர்த்தி செய்ய முடிவதோடு, 1.5 பில்லியன்அமெரிக்கடாலர்களுக்கும் மேற்பட்ட அந்நியச்செலாவணியையும் அதனால் ஈட்ட முடிகிறது.

 

இன்று தனது வெற்றி குறித்தும் உலகம் முழுவதையும்சென்றடைவது குறித்தும் பெருமை கொள்ளும் வளம் கொழிக்கும்இலங்கையின்தேயிலைத் தொழிலின் தவிர்க்கவியலாதமுதுகெலும்பாக நீங்கள்தான் இருக்கிறீர்கள்.

 

இலங்கைவில் மட்டுமல்ல; அதையும் தாண்டி உங்கள் பங்களிப்பு பெரிதும் மதிக்கப்படுகிறது.

 

உங்களின் கடின உழைப்பை நானும் உண்மையிலேயே பெரிதும் பாராட்டுகிறேன்.

 

உங்களுக்கும் எனக்கும் பொதுவானதோர் அம்சம் உண்டு.

 

தேயிலையுடன் எனக்கு சிறப்பானதொரு உறவு உண்டு என்று உங்களில் சிலர் அறிந்திருக்கலாம்.

 

தேயிலை பருகியபடியே விவாதம் என்பது வெறும் கோஷம் அல்ல.

 

மாறாக, நியாயமான உழைப்பின் பெருமை, நம்பகத்தன்மை ஆகியவற்றின் மீதான ஆழ்ந்த மரியாதையை தெரிவிப்பதே அந்தக் கோஷம்.

 

இன்று நாம் உங்களின் முன்னோர்களை நினைவு கூர்கிறோம்.

 

கடினமான மன உறுதியும்துணிவும் கொண்ட அந்த ஆண்களும் பெண்களும் இந்தியாவிலிருந்து அப்போதையசிலோனுக்கு தங்கள் வாழ்க்கைப்பயணத்தைத்துவக்கினார்கள்.

 

அவர்களது பயணம் கடுமையாக இருந்திருக்கவும் கூடும்; அவர்களது போராட்டமும்கடுமையானது. இருந்த போதிலும் அவர்கள் தங்கள் முயற்சியைக் கைவிட்டு விடவில்லை.

 

இன்று அவர்களின் அந்த விடாமுயற்சியை நாம் நினைவு கூர்கிறோம்; வந்தனம் செலுத்துகின்றோம்.

 

உங்கள் தலைமுறையும் கூட தொடர்ச்சியான துன்பங்களைசந்தித்தவர்கள்தான்.

 

புதிதாக விடுதலையடைந்த நாட்டில் உங்களுக்கேயானஅடையாளத்தையும், அறிகுறியையும்உருவாக்குவதற்கான கடுமையான சவால்களை நீங்கள் எதிர்கொண்டீர்கள்.

 

என்றாலும் அவற்றை நீங்கள் துணிவோடு எதிர்கொண்டீர்கள்; உங்களின் உரிமைகளுக்கானபோராடினீர்கள்; என்றாலும் இவை அனைத்தையுமே நீங்கள் அமைதியான வழியில்தான் செய்தீர்கள்.

 

உங்களின் உரிமைகளுக்காக,  உங்களின் மேன்மைக்காக, உங்களின் பொருளாதார வளத்திற்காகப் போராடிய சவுமியமூர்த்தி தொண்டைமான் போன்ற தலைவர்களை உங்களால் எப்போதும் மறக்க முடியாது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் அறிஞரானகணியன்பூங்குன்றனார் அறிவித்தார்: யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று. அதாவது “ உலகத்தில் உள்ள ஒவ்வொரு இடமும் நமது சொந்த ஊர்தான்; அனைத்து மக்களும் நமது உறவினர்கள்தான்” என்று.

 

அந்தக் கூற்றின் உண்மையான உயிர்ப்பை நீங்கள் பற்றி நிற்கிறீர்கள்.

 

இலங்கைவை உங்களின் தாயகமாகவேஆக்கிக்கொண்டிருக்கிறீர்கள்.

 

இந்த அழகிய நாட்டின் சமூகத் தளத்தின்பிரிக்க முடியாத அங்கமாக நீங்கள்பின்னிப் பிணைந்து இருக்கிறீர்கள்.

 

தமிழ்த்தாயின் குழந்தைகள் நீங்கள்.

 

உலகத்தின் மிகப் பழமையான, இன்றும் நிலைத்து நீடித்திருக்கும் ஒரு மொழியைப் பேசி வருபவர்கள் நீங்கள்.

 

உங்களில் பலரும் சிங்களமொழியைப் பேசுகிறீர்கள் என்பது பெருமைக்குரியவிஷயமாகும்.

 

மேலும் மொழி என்பது கருத்துக்களைபரிமாறிக் கொள்ளும் கருவி என்பதற்கும் மேலானதாகும்.

 

அது கலாச்சாரத்தைத் தெரிவிக்கிறது; உறவுகளை உருவாக்குகிறது; குடும்பங்களை இணைக்கிறது; வலுவானதொரு இணைப்பு சக்தியாகவும் அது விளங்குகிறது.

 

பல்வேறு மொழிகளைப்பேசுகின்றதொரு சமூகம் அமைதியோடும்இணக்கத்தோடும்வாழ்வதைக்காண்பதை விட சிறந்த காட்சி இருக்க முடியாது.

 

இந்தப் பன்முகத்தன்மை கொண்டாடப்படவேண்டியதே தவிர, மோதலைக்கோருவதல்ல.

 

நமது கடந்த காலம் எப்போதுமே நல்லிணக்கம் பின்னிப்பிணைந்ததாகவே இருந்து வந்துள்ளது.

 

புத்தரின்ஜாதக கதைகள் உள்ளிட்டு பல்வேறு புத்தநூல்களும் தமிழ் மொழியின் தந்தை எனக் கருதப்படும் அகத்தியமுனிவரைப்பற்றிக்குறிப்பிடுகின்றன.

 

கண்டியைச் சேர்ந்த சிங்களநாயக்கஅரசர்கள் மதுரை, தஞ்சாவூர் பகுதிகளை ஆண்டு வந்த நாயக்கமன்னர்களோடு திருமண உறவுகளை ஏற்படுத்தி வந்திருக்கிறார்கள்.

 

சிங்களமொழியும், தமிழ் மொழியும் அரசவை மொழிகளாக இருந்து வந்துள்ளன.

 

இந்துக்கோயில்கள், புத்தமடாலயங்கள் அனைத்துமே மதிக்கப்பட்டன; புனிதமானதெனப்போற்றப்பட்டு வந்தன.

 

ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றின் இந்த இழைகளை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டுமே தவிர, பிரிக்கக் கூடாது.

 

அத்தகையமுயற்சிகளைமேற்கொள்ளக் கூடிய, அதற்கான பஙகளிப்பைச்செய்யக் கூடிய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.

மகாத்மா காந்தி பிறந்த பூமியானகுஜராத்மாநிலத்திலிருந்து நான் வந்திருக்கிறேன்.

 

கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு முன் கண்டி, நுவரெலியா, மாத்தளை, பாதுல்லா, பண்டாரவிளை, ஹாட்டன் போன்ற இலங்கையின் மிக அழகான பகுதிகளுக்கு அவர் வருகை தந்துள்ளார்.

 

இலங்கைக்குகாந்திஜி மேற்கொண்ட முதலாவதும் ஒரே ஒன்றுமான அந்தப் பயணத்தின் நோக்கம் சமூகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய செய்தியைப் பரப்புவதாகவே இருந்தது.

 

வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தப் பயணத்தை நினைவுகூரும் விதமாக 2015-ல்மாத்தளையில் இந்திய அரசின் உதவியுடன் மகாத்மா காந்தி சர்வதேச மையம் நிறுவப்பட்டது.

 

பின்னாட்களில் இந்தியாவில் மற்றொரு மிகவும் புகழ்பெற்றவராக விளங்கிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இந்த மண்ணில்தான்பிறந்தவர் என்ற முறையில் அவரது வாழ்நாள் முழுவதும் இதனோடு நீடித்த தொடர்பை வைத்துக் கொண்டிருந்தார்.

 

சமீப காலத்தில் கிரிக்கெட் உலகில் மிகச் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்களில்ஒருவரானமுத்தையாமுரளீதரனையும் நீங்கள் உலகத்திற்குவழங்கியுள்ளீர்கள்.

 

உங்கள் முன்னேற்றம் எப்போதுமே எங்களுக்குப்பெருமைப்படத்தக்கஒன்றுதான்.

 

வாழ்வின் பல்வேறு துறைகளிலும் உங்களது சாதனைகளைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் வெற்றியை நாங்கள் போற்றிக்கொண்டாடுகிறோம். உலகத்தின் மூலை முடுக்கெங்கிலும் அவர்கள் தங்களின் முத்திரையைப்பதித்து வருகின்றனர்.

 

இதைப் போன்ற மேலும் பல ஒளிமிக்கவெற்றிகளைக் காண நான் ஆவலோடுஉள்ளேன்.

 

இந்தியா, இலங்கை நாட்டு மக்கள், அவற்றின் அரசுகள் ஆகியவற்றுக்கான முக்கியமான இணைப்புச்சங்கிலியாக நீங்கள் திகழ்கிறீர்கள்.

 

அழகான இந்த நாட்டுடன் நமது தொடர்புகளை தொடர்ந்து தடையேதுமின்றி நீடிக்கச் செய்வதில் உங்களின் பங்கையும் நாங்கள் உணர்கிறோம்.

 

இத்தகைய தொடர்புகளை தொடர்ந்து வளர்த்தெடுப்பதேஎமது அரசின் முன்னுரிமையாக இருந்து வருகிறது.

 

நமது கூட்டணியின்வடிவமும், பங்களிப்பும்தான் அனைத்து இந்தியர்கள், அனைத்து இலங்கை மக்களின் முன்னேற்றத்திற்கு ஒருவகையில் காரணமாக அமைவதோடு உங்களின் வாழ்க்கையிலும் பங்கு வகிக்கிறது.

 

இந்தியாவுடனான உங்கள் உறவுகளை தொடர்ந்து நீடித்து வந்திருக்கிறீர்கள்.

 

உங்களது நண்பர்களும்உறவினர்களும் இந்தியாவில் இருக்கிறீர்கள்.

 

இந்திய திருவிழாக்களையும்நீங்களாகவே கொண்டாடி வருகிறீர்கள்.

 

நமது கலாச்சாரத்தில் திளைத்து அதை உங்களுடையதாகவேஆக்கிக்கொண்டிருக்கிறீர்கள்.

 

உங்களின் இதயங்களில் இந்தியா துடித்துக் கொண்டிருக்கிறது.

 

உங்களின் உணர்வுகளை இந்தியா முழுமையாக எதிரொலிக்கிறது என்பதை எடுத்துக் கூறவே நான் இங்கே உங்கள் முன் நிற்கிறேன்.

 

அனைத்து வழிகளிலும் உங்களது சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக நாங்கள் தொடர்ந்து ஓய்வின்றிப் பாடுபடுவோம்.

 

ஐந்தாண்டு தேசிய நடவடிக்கைத் திட்டம் உள்ளிட்டு உங்களின் வாழ்க்கை நிலைமைகளைமேம்படுத்துவதற்கான அனைத்து தீவிர முயற்சிகளையும்இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது என்பதையும் நான் அறிவேன்.

 

இந்த வகையில் அவர்களது முயற்சிகள் அனைத்திற்கும் இந்தியா தனது முழு ஆதரவையும் தரும்.

 

இலங்கைஅரசுடன் சேர்ந்து உங்களின் நலனுக்காகஇந்தியாவும் பல திட்டங்களை, குறிப்பாக கல்வி, சுகாதாரம், சமூக மேம்பாட்டுத்துறைகளில்மேற்கொண்டுள்ளது.

சிறந்த மாணவர்கள் தொடர்ந்து கல்வி பெறுவதை ஊக்குவிப்பதற்கென1947ஆம் ஆண்டிலேயேசிலோன்எஸ்டேட்ஒர்க்கர்ஸ்எஜுகேஷன்ட்ரஸ்ட்(இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் கல்வி அறக்கட்டளை) உருவாக்கப்பட்டது.

 

இதன்கீழ் இலங்கைவிலும்இந்தியாவிலும்படிப்பதற்கெனமாணவர்களுக்கு சுமார் 700 கல்வி உதவித்தொகைகளை நாம் வழங்கி வருகிறோம்.

 

இதன் மூலம் உங்கள் குழந்தைகளும்பயனடைந்துள்ளனர்.

 

வாழ்வாதாரம், திறன் வளர்ப்பு ஆகிய துறைகளில் பொருத்தமான திறன்களைவழங்குவதற்கென செய்முறை பயிற்சி மையங்கள், 10 ஆங்கில மொழிப் பயிற்சி மையங்கள், பரிசோதனை மையங்கள் ஆகியவற்றை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

 

அதைப்போன்றேதேயிலைத்தோட்டப்பள்ளிகளில் கணினி, அறிவியல் சோதனைக் கூடங்களை உருவாக்கவும் நாங்கள் உதவி செய்துள்ளோம்.

 

தேயிலைத்தோட்டங்களில் உள்ள பள்ளிகளையும் நாங்கள் மேம்படுத்தி வருகிறோம்.

 

சற்று முன்புதான், நானும் இலங்கை அதிபர் சிரிசேனா, பிரதமர் ராணில்விக்ரமசிங்கேஆகியோரும் சேர்ந்து இந்தியாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட150 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை வளாகத்தைடிக்கோயாவில் திறந்து வைத்து மக்களின் சேவைக்காகஅர்ப்பணித்தோம்.

 

இந்தப்பகுதியின்சுகாதாரத்தேவைகலைநிறைவேற்றும் வகையில் மிக நவீனமானவசதிகளைக் கொண்டதாக  அந்த மருத்துவமனை திகழ்கிறது.

 

தற்போது இலங்கையின்மேற்கு, தெற்கு பகுதிகளில் செயல்பட்டு வரும் 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவையை நாட்டின் இதர பகுதிகளுக்கும்விரிவுபடுத்துவது என நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்பதை அறிவிப்பதிலும் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

 

இந்தியாவின் உடல்நலத்திற்கு பாரம்பரியமாக சேவை செய்து வரும் யோகா, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

 

அடுத்த மாதத்தில் நாம் சர்வதேச யோகாதினத்தைகடைப்பிடிக்கவிருக்கிறோம். அதன் பல்வேறு வகையான பயன்களை பரவச் செய்யும் வகையில் உங்களின் தீவிர பங்கேற்பையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

 

முற்றிலும் புதுமையான வகையில் இலங்கைவில் இந்தியாவின் வீட்டு வசதித்திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டின் உட்புறப் பகுதிகளில் 4000 வீடுகள்கட்டப்பட்டு வருகின்றன.

 

இந்த வீடுகள்கட்டப்பட்டுள்ள வீட்டு மனைகளின்உரிமையையும்முதன் முறையாக இந்தப்பயனாளிகளுக்கேதரப்படவுள்ளதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

 

இந்த வகையில் எங்களது உறுதிப்பாட்டை மேலும் தெரிவிக்கும் வகையில் இந்தத்திட்டத்தின்கீழ் நாட்டின் உட்புறப் பகுதிகளில் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் வீடுகளைகட்டவிருக்கிறோம் என்பதை அறிவிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

 

இன்று காலையில்தான்கொழும்புவிலிருந்துவாரணாசிக்கு நேரடி ஏர் இந்தியாவின் நேரடி விமான சேவை குறித்து நான் அறிவித்தேன்.

 

இந்த வசதியின் மூலம் நீங்கள் வாரணாசிக்கு நேரடியாக வந்து சிவபெருமானின்அருளைப் பெற முடியும்.

 

அமைதி, வளம் ஆகியவற்றை நோக்கிய உங்கள் பயணத்தில் இந்திய அரசும் மக்களும் எப்போதுமே உங்களுடன் இருப்பார்கள்.

 

உங்கள் எதிர்காலத்திற்கானஉறுதிமொழியைநிறைவேற்றும் வகையில் உங்கள் கடந்த காலத்தின்சவால்களைவென்றெடுக்க நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்.

 

“தடையற்றஊக்கமும் முயற்சியும் கொண்டவர்களிடமே செல்வம் வந்து சேரும்” என்றே மகத்தானதமிழ்ப்புலவரான திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.

 

உங்கள் குழந்தைகளின் கனவுகளுக்கும்தகுதிக்கும் உங்களின் பாரம்பரியத்திற்கு ஏற்ற வகையில், ஒளிமிக்கதொருஎதிர்காலமாக அது விளங்கும் என்பதிலும் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

 

நன்றி.

மிக்க நன்றி.