Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் சங்கர் ராவ் தத்வாவாடி மறைவுக்கு பிரதமர் இரங்கல்


டாக்டர் சங்கர் ராவ் தத்வாவாடியின் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தேச கட்டமைப்பு மற்றும் இந்தியாவின் கலாச்சார மறுமலர்ச்சிக்கு அவரது விரிவான பங்களிப்புக்காக  டாக்டர் சங்கர் ராவ் தத்வாவாடி நினைவுகூரப்படுவார் என்று திரு மோடி கூறினார். “இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடியதை நான் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். சித்தாந்தத்தில் அவரது தெளிவும், நுணுக்கமான பாணியும் எப்போதும் தனித்து நிற்கிறது” என்று திரு மோடி கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில்  பிரதமர் கூறியிருப்பதாவது:

“டாக்டர் சங்கர் ராவ் தத்வாவாடியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. தேச கட்டமைப்பு மற்றும் இந்தியாவின் கலாச்சார மறுமலர்ச்சி ஆகியவற்றில் விரிவான பங்களிப்புக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவர், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு தன்னை அர்ப்பணித்து, அதன் உலகளாவிய அணுகலை மேம்படுத்தியதன் மூலம் ஒரு அடையாளத்தை உருவாக்கினார். அவர் ஒரு புகழ்பெற்ற அறிஞராகவும் இருந்தார், இளைஞர்களிடையே கேள்வி கேட்கும் உணர்வை எப்போதும் ஊக்குவித்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடனான அவரது தொடர்பை மாணவர்களும் அறிஞர்களும் அன்புடன் நினைவு கூர்கின்றனர். அறிவியல், சமஸ்கிருதம் மற்றும் ஆன்மீகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடியதை நான் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். சித்தாந்தத்தில் அவரது தெளிவும், நுணுக்கமான பாணியும் எப்போதும் தனித்து நிற்கிறது.

ஓம் சாந்தி.”

***

RB/DL