Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜே.பி.எல். நிறுவனத்தின் இணைப்புக்கு பிந்தைய மொத்த பங்குகளையும் முன்பு இருந்த பங்குதாரர்களிடமிருந்து வாங்குவதற்கு தேவையான எம்.எல்.எல். பகுதி சார்ந்த நிதியை அளிக்கும் வகையில் பங்குகள் அல்லது கட்டாய மாற்றிக் கொள்ளத்தக்க கடன்பத்திரங்கள் ஆகியவற்றின் மூலம் எம்.எல்.எல். நிறுவனத்தின் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 75 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்த்துவதற்கு மைலான் லபாரட்டரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் திட்டம் சமர்ப்பிப்பு.


ஜே.பி.எல். நிறுவனத்தின் இணைப்புக்கு பிந்தைய மொத்த பங்குகளையும் முன்பு இருந்த பங்குதார்களிடமிருந்து வாங்குவதற்கு தேவையான எம்.எல்.எல். பகுதி சார்ந்த நிதியை அளிக்கும் வகையில் பங்குகள் அல்லது கட்டாய மாற்றிக் கொள்ளத்தக்க கடன் பத்திரங்கள் ஆகியவற்றின் மூலம் எம்.எல்.எல். நிறுவனத்தின் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 75 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்த்துவதற்கு மைலான் லபாரட்டரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் திட்டத்திற்கு என மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை சமர்ப்பித்த முன்மொழிவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்புதலை அடுத்து, 76 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான அந்நிய நேரடி முதலீடு நாட்டிற்கு பெறப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டுள்ளது.

i) என்.எல்.இ.எம். மருந்துகள் மற்றும் நுகர்பொருள்கள், உற்பத்தி அளவு மற்றும் உள்ளூர் சந்தைகளுக்கு அவற்றை வழங்கும் அளவு ஆகியவை அந்நிய நேரடி முதலீடு செலுத்தப்பட்ட நேரத்தில் உள்ள அதே அளவிற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முழுமையான அளவு நிலைகளில் பராமரிக்கப்பட வேண்டும். இந்த அளவுகள் என்.எல்.இ.எம். மருந்துகள் மற்றும் / அல்லது நுகர்பொருள்களின் கடந்த 3 நிதியாண்டுகளில் உற்பத்தி அளவை அடிப்படையாக கொண்டு இறுதி செய்யப்படும். அந்நிய நேரடி முதலீடு செலுத்தப்பட்டதற்கு முந்தைய இந்த 3 ஆண்டுகளில் எந்த உற்பத்தி அளவு அதிகமோ அதுவே இந்த நிபந்தனைக்கான அளவாக எடுத்துக் கொள்ளப்படும்.

ii) அந்நிய நேரடி முதலீடு செலுத்தப்பட்ட சமயம் மொத்த அளவு நிலையில் 5 ஆண்டுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி செலவினங்கள் பராமரிக்கப்பட வேண்டும். அந்நிய நேரடி முதலீடு செலுத்தப்பட்டதற்கு முந்தைய 3 ஆண்டுகளில் எந்த ஆராய்ச்சி அபிவிருத்தி செலவினம் அதிகமோ அதுவே இந்த நிபந்தனைக்கான அளவாக எடுத்துக் கொள்ளப்படும்.

iii) இத்தொழில் தொடர்பான தொழில்நுட்ப மாற்றம் குறித்த முழுமையான தகவல்கள் அனைத்தையும் எப்.ஐ.பி.பி. செயலகம் வழங்கும். சம்பந்தப்பட்ட நிர்வாக அமைச்சகங்களும் இவற்றை வழங்கலாம். இது நிறுவனங்களில் அந்நிய முதலீடு செலுத்துகையுடன் சேர்த்து வழங்கப்படும்.

iv) அந்நிய நேரடி முதலீடு பெறும் நிறுவனம் என்.எல்.இ.எம்-ன் கீழ் மருந்துகள் தயாரிப்பதை தொடர்ந்து மேற்கொண்டு உள்நாட்டு விலை செல்லுபடியாகும் பகுதிகளில் விற்பனை செய்யும். இந்த உற்பத்தி அளவு கடந்த 3 நிதியாண்டுகளில் மிக உயர்ந்த பட்ச உற்பத்தி அளவை ஒட்டியதாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கப்பட வேண்டும்.

v) இந்த நிறுவனங்கள் அந்நிய நேரடி முதலீடு செலுத்தப்பட்டதற்கு முந்தைய 3 நிதியாண்டுகளில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி சார்ந்த அதிக பட்ச செலவினத்தை பராமரிக்க வேண்டும்.

vi) இத்தொழில் தொடர்பான தொழில்நுட்ப மாற்றம் குறித்த முழுமையான தகவல்கள் அனைத்தையும் எப்.ஐ.பி.பி. செயலகம் வழங்கும். சம்பந்தப்பட்ட நிர்வாக அமைச்சகங்களும் இவற்றை வழங்கலாம். இது நிறுவனங்களில் அந்நிய முதலீடு செலுத்துகையுடன் சேர்த்து வழங்கப்படும்.

vii) எதிர்பார்க்கப்படும் முதலீட்டாளர் மற்றும் எதிர்பார்க்கப்படும் பெற்றுக் கொள்வோர் தலைப்புகளில் எவ்வித ‘முழுமையில்லை’ பிரிவும் இருக்காது.

viii) இந்த நிதி நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் மைலான் குழுமம் புதிதாக வெளிநாட்டு நிதியை செலுத்தி ஜெய் ஃபார்மா லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த நிதி நடவடிக்கையில் எழும் மூலதன-அதிகரிப்பு வரி விதிப்பு சம்பந்தமாக கள அமைப்புகள் ஆய்வு மேற்கொள்ளும்.

ix) லாப ஈவுத் தொகை வரி, வெளிநாட்டு முதலீட்டாளர் பங்குகளை விலக்கிக் கொள்ளும்போது ஏற்படும் எதிர்கால மூலதன-அதிகரிப்பு, வட்டி வருமானம், இதர வருமானங்கள் ஆகியவை குறித்து கள அமைப்புகள் 1961ஆம் ஆண்டு வருமான வரி சட்ட விதிகளின்படியும் இந்த விஷயத்திற்கு பொருந்தும் டி.டி.எ.எ. விதிகளின்படியும் ஆய்வு செய்யும்.

x) வருமான வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகள் தொடர்பான கோரிக்கைகள் சுயேட்சையாக வரித்துறை அதிகாரிகளால் ஆராயப்படும். அதிகாரிகள் வரிச்சலுகை தகுதிகள் எந்த அளவுக்கான சலுகை வழங்குவது போன்றவற்றை நிர்ணயம் செய்து ஏற்பு அளிப்பார்கள். இந்த ஏற்பு இத்தகைய சலுகை வழங்குவதற்கான தகுதிச் சான்றாக அங்கீகரிக்கப்பட மாட்டாது.

xi) இத்தகைய ஏற்பு வரித் தொடர்பான புலனாய்வுகளிலிருந்து எவ்வித பாதுகாப்பையும் அளிக்காது. அதேபோல குறிப்பான அல்லது பொருளான தவிர்ப்புக்கு எதிரான விதிகள் பொருந்துமா இல்லையா என்பதிலிருந்தும் பாதுகாப்பு அளிக்காது.

xii) பல்வேறு பணம் செலுத்துகைகள், சேவைகள், சொத்துக்கள், பங்குகள் போன்றவற்றின் நியாயமான சந்தை மதிப்பு எப்.ஐ.பி.பி. நிதிகளின்படி நிர்ணயிக்கப்படும். அமலில் உள்ள வரிச்சட்டங்கள் மற்றும் விதிகளின்படி வரித்துறை அதிகாரிகள் இதனை ஆய்வு செய்வார்கள். இந்த ஆய்வின் அடிப்படையில் இவற்றின் சந்தை மதிப்பு வரிவிதிப்புக்கென மாற்றியமைக்கப் படும்.