Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜெர்மன் பிரதமருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.


ஒருங்கிணைந்த ஜெர்மன் குடியரசின் பிரதமராக தொடர்ந்து 4வது முறை பதவியேற்றுள்ள மேதகு டாக்டர் ஆஞ்சிலா மெர்க்கலை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

ஜெர்மனியை வலுவான ஆளுமையுடன் வழிநடத்தி வருவதற்காகவும், அவரது தலைமையின் கீழ் ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்களில் ஜெர்மன் முக்கியப் பங்காற்றி வருவதற்கும் பிரதமர் திரு. மோடி, பாராட்டு தெரிவித்தார்.

இந்தியா – ஜெர்மன் இடையேயான இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்திடவும், ஆழப்படுத்திடவும் பிரதமர் மெர்க்கல்லுடன் தொடர்ந்து பணிபுரியும் தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார் பிரதமர் மோடி.

2018 மார்ச் 22 – 28 ஆகிய நாட்களில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளவுள்ள ஜெர்மன் அதிபர் ஃவ்ரான்க் வால்ட்டர் ஸ்டென்மியர்-வுடனான சந்திப்பை தான் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.