Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜெர்மனி அதிபர் டாக்டர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் ஊடகங்களுக்கு அளித்த கூட்டு அறிக்கை

ஜெர்மனி அதிபர் டாக்டர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் ஊடகங்களுக்கு அளித்த கூட்டு அறிக்கை

ஜெர்மனி அதிபர் டாக்டர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் ஊடகங்களுக்கு அளித்த கூட்டு அறிக்கை

ஜெர்மனி அதிபர் டாக்டர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் ஊடகங்களுக்கு அளித்த கூட்டு அறிக்கை

ஜெர்மனி அதிபர் டாக்டர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் ஊடகங்களுக்கு அளித்த கூட்டு அறிக்கை

ஜெர்மனி அதிபர் டாக்டர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் ஊடகங்களுக்கு அளித்த கூட்டு அறிக்கை

ஜெர்மனி அதிபர் டாக்டர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் ஊடகங்களுக்கு அளித்த கூட்டு அறிக்கை

ஜெர்மனி அதிபர் டாக்டர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் ஊடகங்களுக்கு அளித்த கூட்டு அறிக்கை

ஜெர்மனி அதிபர் டாக்டர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் ஊடகங்களுக்கு அளித்த கூட்டு அறிக்கை


அதிபர் மெர்க்கல் அவர்களே,

ஜெர்மனி நாட்டின் சிறப்புக்குழு உறுப்பினர்களே,

என்னுடன் பணிபுரியும் நண்பர்களே,

ஊடக உறுப்பினர்களே,

அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் அவருடன் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள சிறப்புக் குழுவை வரவேற்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

ஜெர்மனியின் மறு ஒருங்கிணைப்பின் 25வது விழாவை முன்னிட்டு இந்திய மக்கள் சார்பாக நான் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முக்கிய தருணத்தில், உள்ளுரிலும் சர்வதேச அளவிலும் நீங்கள் படைத்த சாதனைகளை பெருமையுடன் திரும்பி பார்த்துக் கொள்ளலாம். அதிபர் மெர்க்கல், உங்களின் தலைமை, நம்பிக்கையின் அடித்தளமாக இருந்து ஐரோப்பியா மற்றும் உலக நாடுகள் கடினமான நேரத்தில் சந்தித்தபோது மறு உறுதியை அளித்துள்ளது.

உங்களின் பகுதியில் பல்வேறு வேலைகள் இருந்தும் நீங்கள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளீர்கள். உங்கள் சிறப்புக்குழுவின் வலிமை, இரு அரசுகளுக்கும் இடையேயான ஆலோசனை நீங்கள் இந்தியாவுடன் கொண்டுள்ள உறவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.

பொருளாதார உறவுகளில் நம் கவனம் செலுத்த வேண்டும். வாய்ப்புகளும், சவால்களும் அதிகமாக உள்ள உலகில் இந்தியாவும் ஜெர்மனியும் இணைந்து அமைதியான, மனிதாபிமான, நிலையான எதிர்காலம் உள்ள உலகை உருவாக்கலாம் என்பதில் நான் நம்பிக்கைக் கொண்டுள்ளேன். எங்களது வரலாறு மிகவும் பழமை வாய்ந்தது. உலகிற்கு நாங்கள் ஆற்ற வேண்டிய பொறுப்புணர்வு மற்றும் நட்புறவு ஆகியவற்றை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

மூன்று மணி நேரம் இன்று நாங்கள் சந்தித்தோம். நாளை எங்களது பேச்சுவார்த்தைகள் பெங்களூருவில் தொடரும். எங்களது பேச்சுவார்த்தை குறித்தும் அதனுடைய முடிவுகள் குறித்தும் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

எங்களது முன்னேற்றம் குறித்த திட்டங்களுக்கு ஜெர்மனி ஊக்கமளித்து வருகிறது. மேலும் அதிக அளவு மூலதனம், பொருள்கள் தயாரிப்பு, கட்டமைப்பு வசதிகள் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய பிரிவுகளில் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றில் கூட்டுறவு ஆகியவை மேம்படும் என்று நாங்கள் நம்புகிறோம். ஜெர்மனி நாட்டு பொறியாளர்களும் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களும் தொழில்துறையில் புதிய தலைமுறையை உருவாக்குவார்கள். அதன் மூலம் திறமையான சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்துறையை உருவாக்க முடியும்.

இந்தியாவில் தற்போது 1600 ஜெர்மானிய நிறுவனங்கள் உள்ளன. இவை மேலும் அதிகரித்து வருகின்றன. இவர்கள் இந்தியாவில் உலகிற்குத் தேவையான பணியாளர்களை உருவாக்குவார்கள்.

நவீன நகரங்களை உருவாக்குவது, கங்கை நதியை தூய்மைப் படுத்துவது, கழிவு மேலாண்மை ஆகிய பிரவுகளில் ஜெர்மனி நாட்டின் கூட்டுறவும், உதவியும் சிறந்த முறையில் உருவாகியுள்ளன. அதேபோல கல்வி, பொறியியல், மனித ஆற்றல் ஆகியவற்றிலும் சிறந்த கூட்டுறவு நிலவுகிறது.

தூய்மையான எரிசக்தி மற்றும் தட்பவெப்பநிலை மாற்றத்தை எதிர்கொள்வது ஆகியவற்றில் ஜெர்மனி நாட்டின் தலைமை எடுக்கும் முடிவுகளை நன் பாராட்டுகிறேன். இந்த ஒரு பிரிவில் நமக்கு ஒரே மாதிரியான எண்ணங்களும், கூட்டுறவும் உள்ளன. தட்பவெப்பநிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்து நீண்டகால அடிப்படையில் இந்தியா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையே தட்பவெப்பம் மற்றும் புதுப்பிக்கக்கூடிய கூட்டுறவை ஏற்படுத்த ஒப்புக் கொண்டுள்ளோம். தூய்மையான எரிசக்தி அமைப்பதற்கான திட்டத்திற்கு ஒரு பில்லியன் அளவுக்கும் மேலான யூரோவிற்கும் ஏற்பட்ட உதவியை இந்தியாவுக்கு அளிப்பது மற்றும் சூரிய ஒளியின் மூலம் மின்சக்தியை உருவாக்கும் திட்டத்திற்கு ஒரு பில்லியன் அளவிற்கு யூரோ உதவியை அளிப்பதற்கும் நான் பெரும் மதிப்பை அளிக்கிறேன். தூய்மையான மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி குறித்த ஆராய்ச்சியை மேலும் மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம். வெப்பம் உயர்வதை தடுக்க நாமும் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும்.

பாரிசில் நடைபெறவுள்ள சி.ஒ.பி-21 மாநாட்டில் எடுக்கப்படவுள்ள முடிவுகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம். ஏழை நாடுகள் நிலையான வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்ல உலகில் உள்ள மற்ற நாடுகள் சிறந்த முடிவு எடுக்க வேண்டும்.

பாதுகாப்பு சாதனங்கள் தயாரிப்பது, மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வர்த்தகம், தீவிரவாதத்தை எதிர்கொள்வது ஆகியவற்றில் நமது கூட்டுறவு வளர்ந்து வருகிறது. இரு நடுகளுக்கும் இடையே உள்ள உறவுகளில் பாதுகாப்பு குறித்த மிக முக்கியமான முடிவுகள் இவை.

சர்வதேச ஏற்றுமதி கட்டுப்பாடு அமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்காக ஜெர்மனி ஆதரவு தருவது குறித்து நான் வரவேற்கிறேன். நியூயார்க்கில் ஜி4 உச்சி மாநாட்டில் நானும் சான்ஸ்லரும் ஐக்கிய நாடுகள் சபையில் குறிப்பாக பாதுகாப்பு சபையில் சீர்த்திருத்தங்கள் கொண்டு வர உறுதி பூண்டுள்ளோம்.

இந்த மண்டலத்தில் பொதுவான கொள்கைகளை ஒரே மாதிரியான கருத்துக்களை கொண்டுள்ளோம். மேற்கு ஆசியாவில் கொந்தளிப்பு; ஐரோப்பாவில் சவால்களை; மற்றும், இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆசியா பசிபிக் பகுதியின் நிலையான அமைதியை ஏற்படுத்துவது ஆகியவை இவை ஆகும். ஆப்கானிஸ்தானுக்கு முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும் அமைதி ஆகியவற்றிற்கு ஜெர்மனி அளித்துவரும் ஆதரவுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.

இறுதியாக, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மகிஷாசுரமர்தினி அவதாரத்தில் உள்ள பழமையான 10 ஆம் நூற்றாண்டின் துர்க்கை சிலையை திரும்ப அளித்ததற்கு சான்ஸ்லர் மேர்க்கெல் மற்றும் ஜெர்மனி மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். தீமையை வென்று நன்மையை அளிக்கும் வெற்றிச் சின்னமாக அச்சிலை உள்ளது.

மாற்றங்கள் மற்றும் கொந்தளிப்பபான சூழ்நிலை கொண்ட தற்போதுள்ள நிலையில் இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு இடையே உள்ள கூட்டுறவு உலகில் சிறந்த சக்தியாக விளங்கும்.

நட்புறவு என்னும் செடி தண்ணீர் ஊற்றினால் வளரும் என்ற கலாச்சாரம் இரு நாடுகளுக்கும் பொதுவானது. இன்றைய அமர்வுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நட்பு என்னும் மரம் மலரும் என நான் நம்புகிறேன்.

நன்றி.

***