Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜெய்ப்பூரில் நடைபெற்ற கேல் மகாகும்ப் நிகழ்ச்சியில் பிரதமரின் உரை

ஜெய்ப்பூரில் நடைபெற்ற கேல் மகாகும்ப் நிகழ்ச்சியில் பிரதமரின் உரை


நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் அவர்களே, விளையாட்டு வீரர்களே, பயிற்சியாளர்களே, இளம் நண்பர்களே!

ஜெய்ப்பூர் மகாகேல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொரு வீரர், பயிற்சியாளர், பதக்கம் வென்றவர்கள், அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்த ஏராளமான முகங்களை இன்றைய நிறைவு விழாவில் நான் காண்கிறேன். நாட்டில் தற்போது தொடங்கியுள்ள தொடர் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் விளையாட்டு மகாகும்ப்கள், மிகப்பெரிய மாற்றத்தை பிரதிபலிக்கின்றன. ராஜஸ்தானின் பாரம்பரிய விளையாட்டுகள் இங்கு குழுமையுள்ள இளைஞர்களின் உடல் மற்றும் மன வலிமையை மேம்படுத்துவதில் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது.

நண்பர்களே,

விடுதலையின் அமிர்த காலமான இந்த காலகட்டத்தில் புதிய வரையறைகளையும், அமைப்புமுறைகளையும் நாடு வகுத்து வருகிறது. விளையாட்டுத்துறை, முதன் முறையாக அரசின் பார்வையோடு அல்லாமல் வீரர்களின் பார்வையில் கருதப்படுகிறது. இந்த ஆண்டு நாட்டின் நிதிநிலை அறிக்கையில் விளையாட்டுத் துறைக்கு ரூ. 2500 கோடி என்ற மிகப்பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டிற்கு முன்பு விளையாட்டுத் துறைக்கு 800 முதல் 850 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. அன்றைய காலகட்டத்தோடு ஒப்பிடும்போது தற்போதைய நிதிநிலை அறிக்கையில் இத்துறைக்கு மூன்று மடங்கு அதிகமான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கேலோ இந்தியா பிரச்சாரத்திற்கு மட்டுமே இந்த முறை  ஆயிரம் கோடி ரூபாய்க்கும்  அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, விளையாட்டின் ஒவ்வொரு துறையிலும் ஆதாரங்கள் மற்றும் வசதியை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும்.

நண்பர்களே,

மாவட்ட மற்றும் வட்டார அளவில் விளையாட்டுகளை மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான மாவட்டங்களில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு விளையாட்டு உள்கட்டமைப்புகள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. விளையாட்டுப் பல்கலைக்கழகங்களும் இன்று நிறுவப்பட்டு வருகின்றன. தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு அதிகபட்ச நிதி இந்த முறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 5 லட்சம் உதவித் தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. முக்கிய விளையாட்டுகளில் பரிசுத் தொகையும் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

முழு ஈடுபாட்டுடன் முயன்றால் பலன் நிச்சயம் கிடைக்கும். நீங்கள் உறுதியுடன் இருந்தால் ஒலிம்பிக்கிலும் நாம் சாதனை புரியலாம். நமது இளைஞர்கள் நாட்டை பெருமைப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

—-

AP/RB/KPG