Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய பசிபிக் தீவு நாடுகளின் உச்சி மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் பிரதமரின் உரை

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய பசிபிக் தீவு நாடுகளின் உச்சி மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் பிரதமரின் உரை

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய பசிபிக் தீவு நாடுகளின் உச்சி மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் பிரதமரின் உரை

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய பசிபிக் தீவு நாடுகளின் உச்சி மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் பிரதமரின் உரை

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய பசிபிக் தீவு நாடுகளின் உச்சி மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் பிரதமரின் உரை

 


மேதகு உறுப்பினர்களே,

இந்திய பசிபிக் தீவுகள் நாடுகளின் கூட்டுறவு பற்றிய இரண்டாவது உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறுவது குறித்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நீங்கள் இந்தியாவிற்கு வருகை புரிந்தது பற்றி நான் பெருமையடைகிறேன். குறுகிய தூரத்தில் உங்களது பயணம் இல்லை என்று எனக்குத் தெரியும். இந்தியாவில் நீங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளீர்கள். பரிச்சயம் தொலைவுகளை குருக்கிவிடும் என்று நான் அறிவேன்.

தில்லியில் வருகை புரிந்ததற்கு எங்கள் குடியரசுத் தலைவருடன் நான் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைந்தேன். தில்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களுக்கு நீங்கள் பயணம் மேற்கொண்டு, மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள் என்றும் நான் நினைக்கிறேன்.

தாஜ்மகாலையும் நீங்கள் கண்டு களித்திருப்பீர்கள் என்பதையும் நான் நம்புகிறேன்.

முதல் முறையாக நீங்கள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தால் இந்த நாட்டின் பரப்பளவு, கலாச்சாரம், மக்கள் தொகை ஆகியவைப் பற்றி நீங்கள் வியந்திருப்பீர்கள். அதேபோன்று சிறிய தீவில் மிக்க்குறைந்த மக்கள் தொகையில் ஒரே சமுதாயமாக இயற்கையோடு இயைந்து செயல்படுவதைக் கேட்டு வியப்டைகிறோம்.

இதுபோன்ற வேறுபாடுகள் தான் நமது உலக்கை சிறப்பானதாக்குகிறது.
வரலாற்று சிறப்பு மிக்க ஜெய்ப்பூரில் உங்களை வரவேற்கிறேன். இளஞ்சிவப்பு நிறமுள்ள நகரம் என்று அழைக்கப்படும் இந்த நகரத்தில் அரண்மனைகள், இளஞ்சிவப்பு கற்களால் கட்டப்பட்டவை. வீரத்திற்கும், கலைகளுக்கும், பாரம்பரியத்திற்கும் பெயர் பெற்ற இந்த நகரம் விருந்தோம்பலிலும் சிறப்பு பெற்றவை.

இந்த மாநாட்டை நடத்த ஆதரவளித்த முதலமைச்சர் திருமதி. வசுந்தரா ராஜே சிந்தியாவிற்கும் நான் நன்றி கூறுகிறேன்.

இந்தியாவில் முதல் முதலாக ஒரு பிராந்திய உச்சி மாநாட்டை நான் நடத்துகிறேன். இது மிகவும் சிறப்பானதாக எனக்கு விளங்கும்.

இந்தியாவிற்கும், பசிபிக் தீவுகள் நாடுகளுக்கும் இந்த நூற்றாண்டிற்கான கூட்டாண்மையை ஏற்படுத்துவதாலும் இந்த மாநாடு சிறப்பு மிக்கதாக இருக்கிறது.

இந்தக் கூட்டாண்மை, நமது விருப்பங்கள் மற்றும் நாம் எதிர்நோக்கும் சவால்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதிலும் ஏற்பட்டுள்ளது. நாடுகள் சிறியதானாலும், பெரியதானாலும் உலகில் அனைத்து நாடுகளும் சமம் என்கின்ற நம்பிக்கை இதன் மூலம் ஏற்படுகிறது.

உலகமயமாக்கப்பட்ட இந்த உலகம் ஒருவரையொருவர் சார்ந்திருப்பதை அதிகப்படுத்தியும் பூகோளம் மீதான நமது கண்ணோட்டத்தை மாற்றியும் உள்ளது.

உலக அளவில் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் தற்போது பசிபிக் மற்றும் இந்திய கடற்பிராந்தியத்திற்கு மாற்றப்பட்டு மையப்பகுதியாக உள்ளது என்று கூறலாம். இந்த இரு கடற்பிராந்தியத்திற்கு இடையேயும் மற்றும் சுற்றியுள்ள நாடுகள் எதிர்காலம் ஒன்றுக்கொன்று இணையும் வகையில் உள்ளன.

இந்த காரணங்களால்தான் இந்தியாவுக்கும், பசிபிக் தீவுகள் நாடுகளுக்கும் உள்ள நம்பிக்கைகள் மற்றும் சவால்கள் ஒரே மாதியானவை என்பதை உணர்கிறோம்.

ஆகையால் தான் இந்தப் பகுதியை இந்திய பசிபிக் பிராந்தியம் என்று அழைக்கிறார்கள்.

ஆனால் இது மட்டும் நம்மை ஒன்றிணைக்கவில்லை.

சிறிய தீவுகள் மற்றும் குறைந்த அளவிலான பரப்பளவைக் கொண்ட நாடுகள் மற்றும் குறைந்த அளவு மக்கள்தொகை ஆகியவையாக இருந்தாலும் மற்ற நாடுகளைப் போல இவையும் எங்களுக்கு முக்கியமானவை. சர்வதேச மாநாடுகளில் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் செயல்பட முடியும்.

இந்தக் கூட்டுறவின் அடிப்படையில் தான் சென்ற ஆண்டு சமோவா என்ற இடத்தில் சிறு தீவுகள் வளர்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டோம். அதன் மூலமாக சமோவா வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்த மாநாட்டில் 2015க்கு ஆண்டிற்கு பிறகு ஏற்படக்கூடிய வளர்ச்சி வரைவு ஆவணத்திற்கு நாங்கள் ஆதரவு அளித்தோம்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை விரிவாக்கப்பட்டு சீர்த்திருத்தப்படும்போது இத்தீவுகளுக்கு இடம் அளிக்க நாங்கள் ஆதரவு அளித்தோம்.

பசிபிக் பிராந்தியத்தில் உங்கள் வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வைக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதுபோன்ற பிராந்திய அளவிலான கூட்டுறவு உலகத்தின் மற்ற நாடுகளுக்கு உதாரணமாக அமையும்.

மேதகு உறுப்பினர்களே, உலகம் உங்களை சிறிய தீவுகளாகவும், குறைந்த மக்கள்தொகையைக் கொண்டதாகவும்தான் பார்க்கிறது. ஆனால் நாங்கள் பெரிய மற்றும் அதிக வளம் கொண்ட கடற்பிராந்தியத்தின் நாடுகளாகவும் பார்க்கிறோம்.

உங்களது நாடுகள் சிலவற்றை உங்களுக்கே உரித்தான பொருளாதார மண்டலம் இந்தியாவின் நிலப்பகுதி மற்றும் பொருளாதார மண்டலத்தைவிட பெரியதாக இருக்கும்.

நாம் இப்பொழுது புதிய சகாப்தத்திற்கு வந்துள்ளோம். விண்வெளியைப் போல கடற்பிராந்தியமும் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமாக இருக்கிறது. இதை நன்கு பயன்படுத்தினால் நாம் வளத்தை ஏற்படுத்தலாம். அதனால், தூய்மையான எரிசக்தி, புதிய மருந்து பொருள்கள், உணவு பாதுகாப்பு போன்றவற்றையும் அளிக்கலாம்.

இந்தியாவிற்கும் அதன் எதிர்காலத்திற்கு பெருங்கடல் பிராந்தியம் மிக முக்கியமானதாகும். ஆகவேதான், சென்ற ஆண்டு இந்தியா மற்றும் சர்வதேச அளவிலான கூட்டங்களில் பெருங்கடல் பொருளாதாரத்திற்கு நான் முக்கியத்துவம் அளித்தேன். இந்தப் பகுதியில் நமது கூட்டுறவுக்கு ஏராள்ளமான வாய்ப்பு வளங்கள் இருப்பதாக நான் காண்கிறேன்.

ஐக்கிய நாடுகள் சபையில் சமீபத்தில் ஏற்பட்ட முடிவுகளின் படி நிலையான வளர்ச்சி இலக்குகள் அடையப்பட வேண்டுமெனில், பெருங்கடல் மற்றும் கடல் சார்ந்த ஆதாரங்களை பயன்படுத்துவது மிக முக்கியம் என்பதனால் இந்தியா உங்களுடன் இதற்காக இணைவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நமது உலகளாவிய சவால்கள் ஒரே மாதிரியானவை.

பசிபிக் தீவுகளுக்கு தற்போதுள்ள தட்பவெட்ப நிலை மாற்றம் அச்சுறுத்தலாக உள்ளது. அதோடு இந்தியாவின் 7500 கிலோமீட்டர் நீளமுள்ள கடல் பிராந்தியம் மற்றும் 1300 தீவுகளுக்கும் இது அச்சுறுத்தலாக உள்ளது. பாரீசில் இந்த ஆண்டு பிற்பகுதியில் நடைபெற உள்ள சி.ஓ.பி. 21 மாநாட்டில் தட்பவெட்பநிலை மாற்றம் குறித்த தெளிவான தீர்மானங்களை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

வளர்ந்து வரும் நாடுகளின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தட்பவெட்ப நிலை மாறுதலுக்கு தேவையான நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு உட்பட்டு வேறுபட்ட இலக்கு ஒன்றை ஏற்படுத்த நாம் இணைந்து செயல்படுகிறோம்.

உலக வர்த்தக அமைப்பின் குறிக்கோள்களுக்காக குறிப்பாக, மீன் வளத்திற்கு தேவையான இலக்கை அடைய நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை 70வது ஆண்டு விழாவை கொண்டாடுவது வரலாற்று சிறப்பு மிக்க மைல் கல்லாகும். வரும் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து உறுப்பு நாடுகளுக்கு எழுதி உள்ளேன்.

ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆகின்றன. இந்த காலகட்டத்தில் உலகம் மாறியுள்ளது. நான்கு மடங்கு நாடுகள் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளன. தட்பவெட்ப நிலை மாற்றம் உட்பட பல பெரிய சவால்களை எதிர்நோக்கி உள்ளோம். விண்வெளி மற்றும் பெருங்கடல் பிராந்தியம் போன்ற புதிய எல்லைகள் உருவாகியுள்ளன. டிஜிட்டல் மயமான உலகில் பொருளாதாரமும், உலகமயமாக்கப்பட்ட நிலையில் நாம் வாழ்கிறோம். இதுபோன்ற மாறுபட்ட சூழ்நிலையில் உள்ள உலகில் அதே வேகத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையும் செயல்பட வேண்டும்.

21வது நூற்றாண்டிற்கு தேவையானபடி, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையும் சிர்த்திருத்தப்பட வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்துகிறோம். அப்பாதுகாப்பு சபை சீர்த்திருத்தத்திற்கான பொதுச்சபையின் தலைவர் அளித்த அறிக்கைக்கு உங்களது ஆதரவை நாங்கள் கேட்கிறோம்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் பதவிக்கு நீங்கள் ஆதரவு அளிப்பதன் மூலம் அச்சபையில் உலகளாவிய நிலையில் மாற்றம் ஏற்படும்.

மேதகு உறுப்பினர்களே,

இந்தியா மற்றும் பசிபிக் தீவுகள் நாடுகளுக்கான மாநாடு, உலகளவில் நம்மிடையே கூட்டுறவு வலுவுள்ளதாக உள்ளது என்பதை தெரியப்படுத்துகிறது. மேலும், இருதரப்பு மற்றும் பிராந்திய அளவிலான கூட்டுறவுடன் செயல்பட்டால் இது மேலும் வலுவுள்ளதாக அமையும்.

சென்ற ஆண்டு நடந்த உச்சி மாநாட்டில் பசிபிக் தீவுகள் நாடுகளுக்கு புதிய முயற்சிகளை மேற்கொள்ள நாங்கள் அறிவித்தோம். நாங்கள் இதை இப்பொழுது அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

பசிபிக் தீவுகள் நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவித் தொகை 1 லட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க டாலரிலிருந்து இரண்டு லட்சம் டாலராக உயர்த்தப்படுகிறது. இதைத் தவிர, கணிணி மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கான விசா முறை, கயிறு தொழிற்சாலைக்கு தேவையான இந்திய வல்லுநர்களை அனுப்புவது, பசிபிக் தீவுகள் நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கு பயிற்சித் திட்டங்கள் ஆகியவையும் அளிக்கப்படும்.

வளர்ச்சிக்கு வர்த்தகம் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. பசிபிக் தீவுகள் நாடுகளுக்கான வர்த்தக அலுவலகம் புதுதில்லியில் உள்ள இந்திய வர்த்தக தொழில்துறை சபையில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் நான் அறிவிக்கிறேன்.

இந்தியா மற்றும் பசிபிக் தீவுகள் நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் மூலதனம் ஆகியவற்றை மேம்படுத்த இது முதல் படியாக உள்ளது.

மேதகு உறுப்பினர்களே, உங்களது கருத்துக்களை நாங்கள் கேட்பதில் நான் ஆர்வமாக இருக்கிறேன். நமது நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் மேலும் மேம்பட தேவையான முயற்சிகளுக்கு என்னுடைய கருத்துக்களையும் நான் கூற உள்ளேன்.

ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த சர்வதேச யோகா தினம் குறித்து நீங்கள் ஆதரவு அளித்ததற்கு நான் நன்றி கூறுகிறேன். முதலாவது சர்வதேச யோக தினத்தை நீங்கள் கடைபிடித்த்தற்காகவும் நான் நன்றி கூறுகிறேன்.

முடிவாக இந்த உலகில் விலை மதிப்பற்ற ரத்தினங்களாக உள்ள பசிபிக் தீவுகள் நாடுகளுக்கு இந்த உலகம் மிக அழகுள்ளதாக உள்ளது. கடவுளின் விருப்பத்தை அங்குள்ளோர் வாழ்க்கை பிரதிபலிக்கிறது.

இயற்கையின் விலை மதிப்பற்ற அன்பளிப்பையும் மக்களையும் நாம் பாதுகாக்க ஒருங்கிணைந்து நாம் செயல்பட வேண்டும்.

நன்றி.

••••••