Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜெயின் ஆச்சார்யா எழுதிய நூலை, பிரதமர் காணொலி காட்சி மூலம் வெளியிட்டார்

ஜெயின் ஆச்சார்யா எழுதிய நூலை, பிரதமர் காணொலி காட்சி மூலம் வெளியிட்டார்


ஜெயின் ஆச்சார்யா ரத்னசுந்தரேசுரிஸ்வர்ஜி மகராஜ் எழுதிய “மாரு பாரத், சரு பாரத்” (எனது இந்தியா, நல் இந்தியா) என்ற நூலை பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் காணொலி காட்சி மூலம் இன்று வெளியிட்டார்.

மும்பையில் ரத்னத்ரயி ட்ரஸ்டின் சாகித்ய சத்கர் சமிதி நடத்திய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பிரதமர், ஆச்சார்ய ரத்சசுந்தரேசுரிஸ்வர்ஜி மகராஜின் எழுத்துக்களை பாராட்டியதோடு, 300 நூல்கள் எழுதுவது எளிதான பணியல்ல என்றார். வாழ்வின் பல்வேறு அங்கங்கள் மகாராஜ் அவர்களின் எழுத்துக்களில் வெளிப்படுவதாக தெரிவித்தார். இந்த புத்தகங்கள் “திவ்ய வாணி” என்ற சமூகத்துக்கு திரும்ப அளிப்பதை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார். ராஷ்ட்டிர தர்மம், மத தர்மத்தை விட மேலானது என்றார். நாட்டின் வளர்ச்சியில் முனிவர்களின் பங்கு குறித்து குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் பாரம்பரியம், பல முனிவர்களையும் துறவிகளையும் அளித்துள்ளதாக தெரிவித்தார். வறுமை ஒழிப்பு, தூய்மையான இந்தியா ஆகியவற்றுக்காக பாடுபட வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் லட்சக்கணக்கான இளைஞர்களின் சக்தியை பயன்படுத்தி உறுதியான இந்தியாவை உருவாக்க பாடுபட வேண்டும் என்றார்.

மதவாதம் குறித்து இந்தியா எப்போதும் பேசியதல்ல என்பதை குறிப்பிட்ட பிரதமர், இந்தியா மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்காக ஆன்மிகத்தை போதித்தது என்றார். அனைத்து பிரச்சினைகளுக்கும், ஆன்மிகத்தில் தீர்வு உண்டு என்றார் பிரதமர்.

பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஆச்சார்ய ரத்னசுந்தரேஸ்வர்ஜி மகராஜ், “குடும்பங்களுக்கு மதிப்பீடுகள் உண்டு, நாடுகளுக்கு கலாச்சாரம் உண்டு” என்றார்.

***