Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் நானாஜி தேஷ்முக் பிறந்த நாளில் பிரதமர் மரியாதை


மக்கள் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் நானாஜி தேஷ்முக் ஆகியோர் பிறந்தநாளில், அவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

இது குறித்து பிரதமர் கூறுகையில், ‘‘மக்கள் தலைவர் ஜெயபிரகாஷ்  நாராயணின் பிறந்தாளில் அவரை வணங்குகிறேன். நாட்டின் சுதந்திரத்திற்காக அவர் போராடினார். நமது ஜனநாயக நெறிமுறைகள் தாக்குதலுக்கு உள்ளானபோது, அதைப் பாதுகாக்க ஒரு வலுவான மக்கள் இயக்கத்தை அவர் வழிநடத்தினார். அவரைப் பொறுத்தவரை, தேசிய நலன் மற்றும் மக்கள் நலனுக்கு மேலாக எதுவும் இல்லை.

மக்கள் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணனை பின்பற்றியவர்களில் ஒருவர் நானாஜி தேஷ்முக். ஜெ.பியின் எண்ணங்களையும் இலட்சியங்களையும் பிரபலப்படுத்த அவர் அயராது உழைத்தார். கிராமப்புற வளர்ச்சியை நோக்கிய அவரது பணி நம்மைத் ஊக்குவிக்கிறதுபாரத் ரத்னா நானாஜி தேஷ்முக், அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன்.

மக்கள் தலைவர் ஜெ.பி, நானாஜி தேஷ்முக் போன்ற சான்றோர்கள், இந்த நிலத்தில் பிறந்ததில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. நமது நாட்டுக்கான, அவர்களின் தொலைநோக்கை நிறைவேற்றுவதை நோக்கி செயல்பட, நம்மை மீண்டும் அர்ப்பணிக்கும் நாள் இன்று’’ என குறிப்பிட்டுள்ளார்.

—–