Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜெனீவாவில் சுவிஸ் தலைமை செயல் அலுவலர்களுடன் பிரதமர் சந்திப்பு, பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம்.

ஜெனீவாவில் சுவிஸ் தலைமை செயல் அலுவலர்களுடன் பிரதமர் சந்திப்பு, பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம்.

ஜெனீவாவில் சுவிஸ் தலைமை செயல் அலுவலர்களுடன் பிரதமர் சந்திப்பு, பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம்.


தனது ஐந்து நாடுகள் பயணத்தின் மூன்றாவது நாடான ஜெனீவாவில் சுவிஸ் தலைமை செயல் அலுவலர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்றார்.
ஏ. பி. பி, லஃபார்ஜ், நோவார்ட்டிஸ், நெஸ்லே, ரைட்டர், ராஷ் ஆகிய சுவிஸ் நாட்டின் முக்கிய தொழிற்சாலைகளின் செயல் அலுவலர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

தொழில் அதிபர்களுடன் பேசிய பிரதமர், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதுடன் தனது தேவைகளை நிறைவேற்றும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. சுவிஸ் நாட்டின் வலிமை இதற்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இருநாடுகளுக்கு இடையே உள்ள வலுவான பொருளாதார இணைப்புகள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவை 1.25 கோடி மக்கள் உள்ள சந்தையாக மட்டும் எண்ண வேண்டாம். எங்களிடம் திறமையும், தொழில் செய்ய ஊக்குவிக்கும் அரசும் உள்ளது. உற்பத்தித்தரத்தை சர்வதேச அளவில் கொண்டுவர வேண்டும் என்று இந்தியா எண்ணுகிறது. சுவிஸ் நாட்டின் திறன் மேம்பாடு மாதிரி இதற்கு மிகவும் ஏதுவானதாக உள்ளது என்று பிரதமர் கூறினார்.

இந்த சந்திப்புக்கு முன், சுவிஸ் அதிபர் திரு ஷ்னீடர் அம்மனுடன் பிரதமர் இருநாடுகளுக்கு இடையே உள்ள பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து ஆய்வு செய்தார். வர்த்தகம், தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆகிய துறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இருநாடுகளுக்கு இடையேயான பொதுவான உறுதிப்பாடு, விழுமியங்கள், மக்களுக்கு இடையேயான தொடர்பு மற்றும் பொருளாதார ஒப்பந்தங்கள் இந்தியா, சுவிஸ் இடையேயான உறவை புதிய உயரங்களுக்கு கொண்டுச் செல்லும் என்று பிரதமர் தெரிவித்தார். சி. இ. ஆர். என்­ல் உள்ள இந்திய அறிவியலாளர்கள் மற்றும் மாணவர்களும் பிரதமரை ஜெனீவாவில் இன்று சந்தித்தனர்.