Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜுவாரி பாலம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததற்காக கோவா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


ஜுவாரி பாலம் இன்று முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததை முன்னிட்டு கோவா மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தப் பாலம் இணைப்பை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலா மற்றும் வர்த்தகம் முன்னெடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“ஜுவாரி பாலம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததற்காக கோவா மக்களுக்கு வாழ்த்துக்கள். இந்த முக்கியத் திட்டம் வடக்கு மற்றும் தெற்கு கோவா இடையேயான இணைப்பை மேம்படுத்தும், இதனால் வரும் காலங்களில் சுற்றுலா மற்றும் வர்த்தகம் அதிகரிக்கும்.”

*******

ANU/PKV/BS/DL