Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜி20 மாநாட்டின் கூட்டத்தில் திறனை அதிகப்படுத்துதல் குறித்த பிரதமரின் உரை.


மேதகு தலைவர்களே,

திறனுள்ள மற்றும் வெளிப்படையான உலக நிதி முறையை உருவாக்கிய ஜி20 அமைப்புக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக பொருளாதாரத்தில் இது அவசியமான வளர்ச்சியின் அடிப்படையாகும்.

இந்தியாவில் மத்திய அரசும், மத்திய வங்கியும், நிதி மற்றும் வங்கித் துறையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இங்கே ஜி20யில் இந்த முக்கியமான பொருளைப் பற்றி நாம் விவாதிக்கையில், சில விஷயங்களை கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

அதிகமான முதலீட்டின் தேவை வளரும் நாடுகளில் நிதி ஒருங்கிணைப்பையோ, அல்லது வங்கிச் சேவையையோ பாதிக்கக் கூடாது.

சரியான மேலாண்மையும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துதலும், முதலீட்டின் தேவையை குறைக்கும்.

வங்கி கட்டமைப்புக்கு இணைய பாதுகாப்பு மிகவும் அவசியமாகும்.

ஐ.எம்.எப் அமைப்பு ஒரு ஒதுக்கீட்டின் அடிப்படையிலான அமைப்பாக இருக்க வேண்டுமே ஒழிய, கடன் வாங்கியதை வைத்து நடத்தப்படும் அமைப்பாக இருக்கக் கூடாது.

2010ல் அமெரிக்காவில் எடுத்து வரப்பட்ட சீர்திருத்தங்களுக்கான அங்கீகாரத்தை விரைவாக அளிக்க வேண்டும்.

எங்கள் அங்கீகாரத்துக்காக குறிப்பிட்ட காலத்துக்குள், லாபத்தை நகர்த்தும் திட்டம் மற்றும் அடிப்படை மாற்றத்துக்கான திட்டத்தை அளித்த துருக்கி அதிபருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தானியங்கி தகவல் பரிமாற்றம் தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டத்துக்கு என் வரவேற்பை தெரிவிப்பதோடு, இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவில் ஊழல் மற்றும் கருப்புப் பணம் துளியும் அனுமதிக்கப்படுவதில்லை. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களையும், பணத்தையும் கையாள்வதற்காக எனது அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. பல்வேறு நாடுகளுடன் பரஸ்பர வரிவிதிப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம்.

உள்நாட்டிலேயே உள்ள கருப்புப் பணத்தை வெளிக்கொணர புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். பொது நுகர்வுக்கென்று, ஒரு புதிய சட்டத்தை கொண்டு வர உள்ளோம்.

சர்வதேச முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அனைத்து நாடுகளும், பொதுவான தகவல் பரிமாற்றத்துக்கும், தானியங்கி வரி தகவல் பகிர்வுக்குமான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

ஜி20 ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

தனியார் துறையில் வெளிப்படைத்தன்மைக்கும் நேர்மைத் தன்மைக்கும் அளிக்கப்படும் முக்கியத்துவத்தை வரவேற்கிறேன்.

சர்வதேச அளவில் கருப்புப் பணத்தை மீட்டெடுக்க பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம். வங்கி சேவைத் துறையில் உள்ள ரகசிய தன்மையை நீக்கவும், இதில் நிலவும் பல்வேறு சட்டரீதியான சிக்கல்களை களையவும் நாம் பாடுபட வேண்டும்.

தீவிரவாதத்துக்கு வழங்கப்படும் நிதியை கட்டுப்படுத்தவும், அது தொடர்பாக தடைகளை விதிக்கவும், தீவிரவாதத் தடுப்புக்காக நிதி அமைப்பை ஏற்படுத்தவும் சர்வதேச அளவில் ஒத்துழைப்பு அவசியம்.

ஒவ்வொரு நாட்டின் FATF அறிக்கைகளை பகிர்ந்து கொள்வதோடு, இதில் பின்தங்கிய நாடுகளையும் இதில் இணைக்க திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

நன்றி.

******