மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற ஜி20 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.
இந்தூருக்கு வருகை தந்த பிரமுகர்களை வரவேற்ற பிரதமர், வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் துடிப்பான நகரம் அதன் வளமான சமையல் பாரம்பரியங்களில் பெருமிதம் கொள்கிறது என்றும், முக்கிய பிரமுகர்கள் நகரத்தின் அனைத்து வண்ணங்கள் மற்றும் சுவைகளையும் ரசிக்க முடியும் என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.
வேலைவாய்ப்பு மிக முக்கியமான பொருளாதார மற்றும் சமூக காரணிகளில் ஒன்றாகும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், வேலைவாய்ப்புத் துறையில் சில மிகப்பெரிய மாற்றங்களின் நுழைவாயிலில் உலகம் உள்ளது என்று கூறினார். இந்த விரைவான மாற்றங்களை நிவர்த்தி செய்ய பதிலளிக்கக்கூடிய மற்றும் பயனுள்ள உத்திகளைத் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நான்காவது தொழிற்புரட்சியின் இந்த சகாப்தத்தில், தொழில்நுட்பம் வேலைவாய்ப்பிற்கான முக்கிய உந்துசக்தியாக மாறியுள்ளதுடன், தொடர்ந்து நிலைத்திருக்கும் என்று பிரதமர் கூறினார். கடந்த அத்தகைய தொழில்நுட்பம் தலைமையிலான மாற்றத்தின் போது எண்ணற்ற தொழில்நுட்ப வேலைகளை உருவாக்குவதில் இந்தியாவின் திறனை அவர் எடுத்துரைத்தார். மேலும் இதுபோன்ற மாற்றங்களின் புதிய அலையை வழிநடத்தும் பல புத்தொழில்களின் தாயகமான இந்தூர் பற்றியும் அவர் பேசினார்.
மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களை திறமையாக்குவதை வலியுறுத்திய பிரதமர், திறன், மறுதிறன் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை எதிர்கால தொழிலாளர்களின் தாரக மந்திரங்கள் என்று கூறினார். இதை நனவாக்கும் இந்தியாவின் ‘திறன் இந்தியா இயக்கம் மற்றும் இதுவரை 12.5 மில்லியனுக்கும் அதிகமான இந்திய இளைஞர்களுக்கு பயிற்சியளித்த ‘பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டம்’ ஆகியவற்றை அவர் எடுத்துக்காட்டுகளாகக் கூறினார். “செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், இணையம் சார்ந்த சாதனங்கள் மற்றும் ட்ரோன்கள் போன்ற தொழில்துறை நான்கு புள்ளக பூஜ்ஜியம்’ துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது” என்று பிரதமர் மேலும் கூறினார்.
கொரோனா காலத்தில் இந்தியாவின் முன்கள சுகாதாரப் பணியாளர்களின் திறன்கள் மற்றும் அர்ப்பணிப்பை எடுத்துரைத்த பிரதமர், இது இந்தியாவின் சேவை மற்றும் இரக்க கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது என்றார். இந்தியா உலகின் மிகப்பெரிய திறமையான தொழிலாளர்களை உருவாக்கும் நாடுகளில் ஒன்றாக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும், உலகளவில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் பணியாளர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் ஒரு யதார்த்தமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். திறன்களின் வளர்ச்சி மற்றும் பகிர்வை உலகமயமாக்குவதில் ஜி20 அமைப்பின் பங்கை அவர் வலியுறுத்தினார். திறன்கள் மற்றும் தகுதித் தேவைகளின் அடிப்படையில் தொழில்களை சர்வதேச அளவில் அங்கீகரிக்கும் உறுப்பு நாடுகள் முன்முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். இதற்கு சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் புலம்பெயர்வு மற்றும் இயக்க கூட்டுமுயற்சிகளின் புதிய மாதிரிகள் தேவை என்று அவர் கூறினார். முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் பற்றிய புள்ளிவிவரங்கள், தகவல்கள் மற்றும் தரவுகளை பகிர்ந்து கொள்ள அவர் பரிந்துரைத்தார். இது உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு சிறந்த திறன், தொழிலாளர் திட்டமிடல் மற்றும் இலாபகரமான வேலைவாய்ப்புக்கான ஆதார அடிப்படையிலான கொள்கைகளை உருவாக்க அதிகாரம் அளிக்கும்.
பெருந்தொற்றின் போது மீள்திறனின் தூணாக உருவெடுத்துள்ள செயலி சார்ந்த நிரந்தரமற்ற மற்றும் பகுதிநேர வேலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அடங்கிய பொருளாதாரத்தில், புதிய வகை தொழிலாளர்களின் பரிணாம வளர்ச்சி மாற்றத்திற்கு வித்திட்டுள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இது நெகிழ்தன்மை வாய்ந்த வேலைகளை வழங்குவதுடன் வருமான ஆதாரங்களையும் பூர்த்தி செய்கிறது என்றும் அவர் கூறினார். குறிப்பாக இளைஞர்களுக்கு இலாபகரமான வேலைவாய்ப்பை உருவாக்கும் மகத்தான ஆற்றலை இது கொண்டிருக்கும் அதே நேரத்தில், பெண்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு மாற்றகரமான கருவியாகவும் மாறும் என்று அவர் கூறினார். அதன் திறனை உணர்ந்து, இந்த புதிய தலைமுறை தொழிலாளர்களுக்கான புதிய கால கொள்கைகள் மற்றும் தலையீடுகளை வடிவமைக்க வேண்டியதன் அவசியத்தை திரு மோடி வலியுறுத்தினார். வழக்கமான வேலைக்கான வாய்ப்புகளை உருவாக்க நிலையான தீர்வுகளைக் கண்டறியவும், சமூக பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய மாதிரிகளைக் கொண்டு வரவும் அவர் பரிந்துரைத்தார். கிட்டத்தட்ட 280 மில்லியன் பதிவுகளைக் கண்டுள்ள இந்தியாவின் ‘இ ஷ்ரம் தளம் குறித்து விளக்கிய பிரதமர், இது தொழிலாளர்களுக்கான இலக்கு தலையீடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார். வேலையின் தன்மை நாடுகடந்ததாக மாறியுள்ளதால் நாடுகள் இதேபோன்ற தீர்வுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
மக்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவது 2030 நிகழ்ச்சி நிரலின் ஒரு முக்கிய அம்சமாக இருந்தாலும், சர்வதேச அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தற்போதைய கட்டமைப்பானது, சில குறுகிய வழிகளில் கட்டமைக்கப்பட்ட நன்மைகளை மட்டுமே கணக்கிடுகிறது, அதே நேரத்தில் பிற வடிவங்களில் வழங்கப்படும் பல நன்மைகள் இந்த கட்டமைப்பின் கீழ் வராது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் சமூகப் பாதுகாப்பு குறித்த சரியான நிலையைப் புரிந்துகொள்வதற்கு, உலகளாவிய பொது சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் போன்ற பயன்கள் கணக்கிடப்பட வேண்டும் என்று திரு மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார். ஒவ்வொரு நாட்டின் தனித்துவமான பொருளாதார திறன்கள், பலங்கள் மற்றும் சவால்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் பரிந்துரைத்ததுடன், அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரே அளவு என்ற அணுகுமுறை சமூகப் பாதுகாப்பிற்கான நிலையான நிதியளிப்புக்கு ஏற்றதல்ல என்று தெரிவித்தார்.
உரையை நிறைவு செய்கையில், இந்தக் கூட்டம் உலகெங்கிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களின் நலனுக்கான ஒரு வலுவான செய்தியை அனுப்பும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இத்துறையில் மிகவும் அவசரமான சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அனைத்துப் பிரமுகர்களும் எடுத்துவரும் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
****
ANU/BR/KPG
Sharing my remarks at the G20 Labour and Employment Ministers' Meeting. @g20org https://t.co/lyCVUY5lwz
— Narendra Modi (@narendramodi) July 21, 2023