Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜி20 உச்சி மாநாட்டிற்காகப் பிரதமர் இந்தோனேசியா பயணம்


இந்தோனேசிய அதிபர் மேன்மைதங்கிய திரு. ஜோகோ விடோடோ   அழைப்பின் பேரில் 17வது G20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 14 முதல் 16 வரை இந்தோனேசியாவின் பாலி நகருக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

பாலி உச்சிமாநாட்டின் போது,  “ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம்” என்ற  கருப்பொருளின் கீழ்  உலகளாவிய  முக்கிய பிரச்சினைகள் குறித்து G20 தலைவர்கள் விரிவாக ஆலோசிப்பார்கள். G20 உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக உணவு மற்றும் எரிசக்தி  பாதுகாப்பு; சுகாதாரம்;  டிஜிட்டல் பரிமாற்றம் என மூன்று  அமர்வுகள் நடைபெறும்.

உச்சிமாநாட்டின் நிறைவு அமர்வில், அதிபர் விடோடோ, ஜி20 தலைவர் பதவியை பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் அடையாளபூர்வமாக ஒப்படைப்பார். 2022 டிசம்பர் 1 முதல் G20 தலைவர் பதவியை இந்தியா முறைப்படியாக ஏற்கும்.

உச்சிமாநாட்டிற்கிடையே, பிரதமர் மற்ற நாடுகளின் பிரதமர்கள் சிலருடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார். பாலியில் உள்ள இந்திய சமூகத்தினருடனும் பிரதமர் உரையாற்றுவார்.

**************