Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜி 20 புதுதில்லி தலைவர்களின் தீர்மான அமலாக்கத்தின் செயலாக்கம் குறித்து பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா ஆய்வு செய்தார்


ஜி20 புது தில்லி தலைவர்களின் தீர்மான அமலாக்கத்தின் செயலாக்கம் குறித்து பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா ஆய்வு செய்தார்.

தற்கானக் கூட்டத்தில் நித்தி ஆயோக்கின் துணைத்தலைவர், ஜி20 தலைவர், ஜி20 தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் வெளியுறவு அமைச்சகம், பொருளாதார விவகாரங்கள் துறை மற்றும் நித்தி ஆயோக் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தற்போது நடைபெற்று வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அந்தந்த அமைச்சகங்கள் முன்னிலை வகித்து, தொடர்புடைய அனைத்து துறைகளையும் உள்ளடக்கி ஏழு இணையதள கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.  (i) வலுவான, நீடித்த, சீரான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, (ii) நீடித்த வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துதல் (iii) நீடித்த எதிர்காலத்திற்கான பசுமை மேம்பாட்டு ஒப்பந்தம், (iv) 21-ம் நூற்றாண்டிற்கான பலதரப்பு அமைப்புகள் (v) தொழில்நுட்ப மாற்றம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, (vi) மகளிர் தலைமையிலான வளர்ச்சி மற்றும் (vii) பயங்கரவாதம் மற்றும் பணமோசடியை ஒழித்தல் ஆகிய கருப்பொருள்களில் இந்த கருத்தரங்குகளை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலும், புதுதில்லி தலைவர்களின் பிரகடனத்தை திறம்பட செயல்படுத்துவது குறித்து துறை வல்லுநர்களிடமிருந்து நுண்ணறிவுகளை சேகரிக்க நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு சிந்தனைக் குழுக்களை ஈடுபடுத்த ஒரு கருத்தரங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரகடனத்தை செயல்படுத்துவதை தொடர்ந்து கண்காணிக்க உயர்மட்ட கண்காணிப்பு அமைப்பு அமைக்கப்படும் என்று முதன்மை செயலாளர் கூறினார்.

புது தில்லி உச்சிமாநாட்டின் போது பிரதமர் தனது உரையில் முன்மொழிந்த ஒரு முன்முயற்சியான வரவிருக்கும் ஜி20 காணொலிக் காட்சி உச்சிமாநாடு குறித்தும் முதன்மைச் செயலாளர் விவாதித்தார். உச்சிமாநாட்டைத் தொடர்ந்து எந்தவொரு நாடும் இதுபோன்ற காணொலிக் காட்சி மூலம் உச்சிமாநாட்டை நடத்துவது இதுவே முதல் முறை என்பதால், அனைத்து உறுப்பு நாடுகளுக்கும், விருந்தினர் நாடுகளுக்கும் தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டிதன் அவசியத்தை முதன்மைச் செயலாளர் வலியுறுத்தினார். 

இந்த சந்திப்பின் போது, வெளியுறவுச் செயலாளர் திரு வினய் குவாத்ரா, 2023 நவம்பரில் நடைபெறவிருக்கும் இரண்டாவது உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து முதன்மை செயலாளருக்கு விளக்கினார்.

***

(Release ID: 1968894)
ANU/AD/IR/RS/KRS