பாலியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் மேன்மை தங்கிய ரிஷி சுனக்-கை சந்தித்துப் பேசினார்.
இருநாட்டு தலைவர்களின் முதல் சந்திப்பு இதுவாகும். அப்போது இங்கிலாந்து பிரதமராக சுனக் பொறுப்பேற்றதற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது இந்தியா-இங்கிலாந்து இடையே பரந்த அளவிலான கூட்டாண்மை மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேலும், ஜி-20 மற்றும் காமன்வெல்த் உள்ளிட்ட அமைப்புகளில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்து இரு தலைவர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வர்த்தகம், போக்குவரத்து, பாதுகாப்பு, பந்தோபஸ்து போன்ற முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
**********
SMB/KG/KRS
(Release ID: 1876456)
Prime Ministers @narendramodi and @RishiSunak met on the margins of @g20org Summit in Bali. The leaders exchanged views on further strengthening the India-UK cooperation in various sectors including commerce and defence. @10DowningStreet pic.twitter.com/DL4gfH8jeI
— PMO India (@PMOIndia) November 16, 2022
Was great to meet PM @RishiSunak in Bali. India attaches great importance to robust India-UK ties. We discussed ways to increase commercial linkages, raise the scope of security cooperation in context of India’s defence reforms and make people-to-people ties even stronger. pic.twitter.com/gcCt35m1uw
— Narendra Modi (@narendramodi) November 16, 2022