Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜாலியன் வாலாபாக் தியாகிகளுக்குப் பிரதமர் அஞ்சலி


ஜாலியன் வாலாபாக் தியாகிகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (13.04.2025) அஞ்சலி செலுத்தியுள்ளார். வருங்கால தலைமுறையினர் அவர்களின் உறுதியான உணர்வை எப்போதும் நினைவில் கொள்வார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

“ஜாலியன் வாலாபாக் தியாகிகளுக்கு நாம் அஞ்சலி செலுத்துகிறோம். வரும் தலைமுறையினர் அவர்களின் உறுதியான உணர்வை எப்போதும் நினைவில் கொள்வார்கள். அது உண்மையில் நமது நாட்டின் வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயம். அவர்களின் தியாகம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.”

 

****

PLM/DL