ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பகவான் பிர்சா முண்டா நினைவு பூங்கா மற்றும் சுதந்திர போராட்ட வீரர் அருங்காட்சியகத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். பகவான் பிர்சா முண்டாவின் திருவுருவச் சிலைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“ராஞ்சியில் உள்ள பகவான் பிர்சா முண்டா அருங்காட்சியகத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினேன்”
ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் முதலமைச்சர் திரு ஹேமந்த் சோரன், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா ஆகியோரும் பிரதமருடன் சென்றிருந்தனர்.
***
ANU/PKV/PLM/RS/KPG
रांची में भगवान बिरसा मुंडा संग्रहालय जाकर उन्हें पुष्पांजलि अर्पित की। pic.twitter.com/ca94AgOwQK
— Narendra Modi (@narendramodi) November 15, 2023