Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார்

ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார்

ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார்

ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார்


ஜார்கண்ட் மாநிலத்தின் சாஹிப்கன்ஜில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார்.

கங்கை நதிக்கு மேலே 4-வழிப்பாதை பாலம் மற்றும் பல பல்முனை முனையம் அமைப்பதற்கான அடிக்கல்லை பிரதமர் நாட்டினார். வாரணாசியில் இருந்து ஹால்டியா வரையிலான தேசிய-கடல்வழி பாதை 1-ஐ அமைப்பதற்கு இந்த பல்முனை நிலையம் முக முக்கியமாகும்.
311 கி.மீ அளவிலான கோவிந்தபூர்-ஜமத்தரா-தும்கா-சாஹிப்கன்ஜ் நெடுஞ்சாலையை துவக்கிவைத்த பிரதமர் சாஹிப்கன்ஜ் மாவட்ட மருத்துவமனை மற்றும் சாஹிப்கன்ஜ் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சூரிய மின் சக்தியை நாட்டுக்கு அற்பணித்தார்.
பஹாடியா சிறப்பு இந்திய ரிசர்வ் படையில் சேரும் காவலர்களுக்கு நியமன சான்றிதழ்களை வழங்கிய பிரதமர் சுய உதவி குழுக்களின் பெண் தொழில் முனைவோர்களுக்கு ஸ்மார்ட் போன்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் இந்த வளர்ச்சி திட்டங்கள் சந்தல் பர்கனா பகுதிக்கு நன்மையை உண்டாக்கும், மேலும் பழங்குடி சமூகங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று கூறினார். இந்தியாவில் உள்ள ஏழை மக்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ ஆசைப்படுவதோடு தங்களின் திறமையை நிரூபிக்க வாய்ப்பினையும் தேடுகின்றனர். அவர்களின் திறமையில் தனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று பிரதமர் கூறினார்.

உண்மைக்கான காலம் இந்தியாவில் துவங்கிவிட்டது என்று கூறிய பிரதமர் ஏழை மக்கள் தங்களுக்கு உரியவற்றை பெறுவதற்காக தான் எடுக்கும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஆசி தேவை என்று கேட்டுக்கொண்டார்.