உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம், பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவிகளை வழங்கி வருகிறது என்று அவர் உறுதியளித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது:
“நெஞ்சை உலுக்குகிறது! உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. அப்பாவிக் குழந்தைகளை இழந்து வாடும் மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்தைத் தாங்கும் சக்தியை அவர்களுக்கு வழங்குமாறு கடவுளை பிரார்த்திக்கிறேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ் உள்ளூர் நிர்வாகம் நிவாரணம் மற்றும் மீட்புக்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது: பிரதமர் @narendramodi”
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் திரு மோடி அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“உத்தரபிரதேசத்தின் ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ .2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் @narendramodi அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.”
***
RB/DL
हृदयविदारक! उत्तर प्रदेश में झांसी के मेडिकल कॉलेज में आग लगने से हुआ हादसा मन को व्यथित करने वाला है। इसमें जिन्होंने अपने मासूम बच्चों को खो दिया है, उनके प्रति मेरी गहरी शोक-संवेदनाएं। ईश्वर से प्रार्थना है कि उन्हें इस अपार दुख को सहने की शक्ति प्रदान करे। राज्य सरकार की…
— PMO India (@PMOIndia) November 16, 2024