Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜல் ஜீவன் இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்


ஜல் ஜீவன் இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள  பிரதமர் திரு நரேந்திர மோடி, பொது சுகாதாரத்தில் சுத்தமான தண்ணீரைப் பெறுவதற்கான பங்கு பற்றி குறிப்பிட்டுள்ளார்.

மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தனது ட்விட்டர் பதிவில், WHO அறிக்கையின்படி,  குழாய் மூலம் பாதுகாப்பான  நீர் வழங்குவதன்  மூலம் உலக அளவில் 4 லட்சம் உயிர்கள் வயிற்றுப்போக்கு நோய் இறப்புகளிலிருந்து காப்பாற்றப்படும் என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சரின் ட்விட்டர் பதிவுக்கு  பதிலளித்து  பிரதமர் கூறியிருப்பதாவது;

“ஜல் ஜீவன் மிஷன் ஒவ்வொரு இந்தியருக்கும் சுத்தமான மற்றும் பாதுகாப்பான தண்ணீரை அணுகுவதை உறுதி செய்வதற்காக திட்டமிடப்பட்டது. இது பொது சுகாதாரத்திற்கான ஒரு முக்கியமான அடித்தளமாகும். இந்த பணியை நாம் தொடர்ந்து வலுப்படுத்துவோம். நமது சுகாதார அமைப்பை மேம்படுத்துவோம்’’.

***

SM/PKV/DL