Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 75% நிறைவு செய்ததற்காக அருணாச்சலப் பிரதேசத்தைப் பாராட்டிய பிரதமர்


அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் 1.73 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் குடிநீர் வழங்கும் பணியில் 75% மக்களுக்கு குடிநீர் இணைப்பு கிடைக்கச் செய்ததைத் தொடர்ந்து, அம்மாநில முதலமைச்சர் மற்றும் அவரது குழுவினருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு.பேமா கண்டுவின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர், “அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் உள்ள கடினமான நிலப்பரப்பிலும், ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் அமிர்த காலத்தில் 75% மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது. இதை செய்த குழுவிற்கு பாராட்டுக்கள், மீதமுள்ள பகுதிகளையும் விரைவில் நிறைவு செய்ய வாழ்த்துகள்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

**********

AD/CR/DL