Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த தொழிலதிபரும், அரசு பயனாளியுமான திரு நஜீமுடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார் பிரதமர்


வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர் நிகழ்ச்சியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தொழில் முனைவோரும், அரசு பயனாளியுமான திரு நசீமின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

நண்பர் நசீமுடன் மறக்க முடியாத செல்ஃபி. அவர் செய்யும் நல்ல வேலையால் நான் ஈர்க்கப்பட்டேன். பொதுக்கூட்டத்தில், அவர் ஒரு செல்ஃபி கேட்டார். அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

***

PKV/AG/KV