Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜம்மு காஷ்மீருக்கு பிரதமர் நாளை பயணம்


பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கிறார்.

காஷ்மீர் தலைநகரம் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் பொது கூட்டம் ஒன்றில் உரையாடுவார்.

ராம்பனில் உள்ள சந்தேர்கோட் என்ற இடத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள விழாவில் பிரதமர் 450 மெகாவாட்டிற்கான பக்லிகர் நீர்மின் உற்பத்தி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை துவக்குவார். அதோடு, ராம்பன்-உதம்பூர் இடயே உள்ள சாலையை நான்கு வழி பாதையாக மாற்றவும் ராம்பன்-பநிஹல் இடையே தேசிய நெடுஞ்சாலை – 44ஐ அமைக்கவும் அடிக்கல் நாட்டுவார். அதன்பின் அங்கு கூடியுள்ள பொதுமக்களிடையே உரையாற்றுவார்.

*****