ஜம்மு காஷ்மீரிலும் இடதுசாரி பயங்கரவாதம் பாதித்துள்ள மாநிலங்களிலும் இந்திய ரிசர்வ் படையின் 17 பிரிவுகளை உருவாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல். இடதுசாரி பயங்கரவாதம் பாதித்துள்ள மாநிலங்களிலும் இந்திய ரிசர்வ் படையின் 17 பிரிவுகளை உருவாக்குவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஜம்மு காஷ்மீரில் 5 பட்டாலியன்களும் சத்தீஸ்கரிலும் 4ம், ஜார்க்கண்டில் 3ம் ஒடிசாவில் 3ம் மகாராஷ்ட்ராவில் 2ம் ஆக இந்த பட்டாலியன்கள் உருவாக்கப்படும்.
இந்த 17 பட்டாலியன்கள் உருவாக்கப்படுவதற்கான முக்கிய அணுகுமுறைகள் வருமாறு : –
• உள்ளூர் இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். இதற்கென தேவைப்பட்டால் மாநில அரசுகள் வயது, கல்வித்தகுதி போன்ற தகுதிகளை தளர்த்திக் கொள்ள வேண்டும்
• ஜம்மு காஷ்மீரில் உருவாக்கப்படவுள்ள 5 பட்டாலியன்களைப் பொறுத்தவரை 60 சதவீத கான்ஸ்டபிள் மற்றும் 4 ம் பிரிவு பணி இடங்கள் ஜம்மு காஷ்மீரின் எல்லை மாவட்டங்களிலிருந்து நிரப்பப்படும்.
• இடதுசாரி பயங்கரவாதம் பாதித்த பகுதிகளில் 75 சதவீத கான்ஸ்ட்டபிள் பதவி இடங்கள் பாதுகாப்பு தொடர்பான செலவினத் திட்டத்தின் கீழ் வரும் 27 முக்கிய மாவட்டங்களிலிருந்து நிரப்பப்படும்.
1971 ம் ஆண்டு மத்திய அரசு இந்திய ரிசர்வ் பட்டாலியன் என்ற திட்டத்தை தொடங்கியது. இது வரை 153 இந்திய ரிசர்வ் பட்டாலியன்கள் பல்வேறு மாநிலங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 144 பட்டாலியன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட்டில் உள்ள ஒரு ரிசர்வ் பட்டாலியன் சிறப்பாக அமைக்கப்பட்ட இந்திய ரிசர்வ் பட்டாலியனாக மாற்றப்பட்டு 2 பொறியியல் கம்பெனிகளையும் 5 பாதுகாப்பு கம்பெனிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்