Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜம்மு காஷ்மீரின் அழகு மற்றும் விருந்தோம்பல் குறித்த மக்களின் கருத்துக்களை பிரதமர் பகிர்வு


பைசாரன், அரு, கோகர்நாக், அச்பால், குல்மார்க், ஸ்ரீநகர் மற்றும் தால் ஏரியின் அழகைக் குறிப்பிட்டு ஜம்மு காஷ்மீரின் அழகு மற்றும் விருந்தோம்பல் குறித்த நாட்டு மக்களின் கருத்துக்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

திரு ரஞ்சித் குமார் என்பவரது ட்விட்டர் பதிவிற்கு, கடந்த 2019- ஆம் ஆண்டு தமது ஸ்ரீநகர் பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவிட்டு பிரதமர் பதிலளித்துள்ளார்.

“அபாரம். 2019- ஆம் ஆண்டு எனது ஸ்ரீநகர் பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்”, என்று ட்விட்டர் பதிவில் பிரதமர் பதிலளித்துள்ளார்.

****