Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜம்முவில் பிரதமர்: ஷெர்-ஏ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு; அடிப்படை கட்டமைப்புத் திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்

ஜம்முவில் பிரதமர்: ஷெர்-ஏ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு; அடிப்படை கட்டமைப்புத் திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்


 

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜம்முவில் இன்று (19.05.2018)  ஷெர்-ஏ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். பின்னர், பாகல்துல் மின் உற்பத்தி திட்டத்திற்கும், ஜம்மு சுற்றுச்சாலைத் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். ஸ்ரீ மாதா வைஷ்ணதேவி ஆலய நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள தாரக்கோட் மார்க் மற்றும் மெட்டீரியல் ரோப்வே திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர், நவீன  தொழில்நுட்பம், வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், நம் நாட்டு இளைஞர்கள் இந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

வேளாண்மையிலும், பல்வேறு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, விவசாயிகளுக்கு பயனளிக்கக் கூடிய புதிய கலாச்சாரத்தை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே, மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அறிவியல் அணுகுமுறைகள், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும்  மேம்பாட்டு பணிகள் மூலம், விவசாயத்தை ஒரு லாபகரமான தொழிலாக மாற்றுவதில், பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களை முக்கிய பங்காற்றச் செய்ய முடியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

 பாகல்துல் மின் உற்பத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியபின் பேசிய பிரதமர், ஒரு நீர் மின்திட்டத்தை தொடங்கி வைக்கும் வேளையில் அடுத்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் இந்நாள் ஒரு சிறந்த நாள் என்றும் குறிப்பிட்டார்.  நாட்டில் உள்ள வளர்ச்சிக் குறைவான அனைத்து பகுதிகளையும் மேம்படுத்த, தனித்தனி திட்டங்களுக்கு மாற்றாக ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் மத்திய அரசு பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தாரக்கோட் வழித்தடம், மாதா வைஷ்ணதேவி ஆலயத்திற்கு செல்வதற்கான மாற்றுப்பாதையாக திகழும் என்று குறிப்பிட்ட அவர், இந்த மாற்றுப்பாதை யாத்ரீகர்களுக்கு பெரும் பயனுள்ளதாக  அமையும் என்றும் தெரிவித்தார். சுற்றுலா, குறிப்பாக ஆன்மீக சுற்றுலா ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வருவாய் திரட்டித் தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.