Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு


ஜப்பான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. டரோ கோனோ பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று (07.01.2019) சந்தித்துப் பேசினார்.

பிரதமர் திரு மோடி 2018-அக்டோபர் மாதத்தில் ஜப்பான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட பிறகு சமீப மாதங்களாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திரு. கோனோ பிரதமரிடம் எடுத்துரைத்தார்.

பிரதமர் திரு. மோடி, 2018-அக்டோபரில் ஜப்பான் நாட்டிற்கு தாம் மேற்கொண்ட வெற்றிகரமான பயணம் குறித்து நினைவு கூர்ந்தார். இந்தியா-ஜப்பான் இடையேயான சிறப்பு உத்தி மற்றும் சர்வதேச கூட்டுறவினை மேலும் வலுபடுத்த தான் உறுதியோடு இருப்பதை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜப்பான் நாட்டுடனான வருடாந்திர உச்சி மாநாட்டின் அடுத்த சுற்றை நடத்த இந்தியா எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக பிரதமர் கூறினார்.