Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடியின் பத்திரிக்கையாளர் கூட்டு அறிக்கை

ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடியின் பத்திரிக்கையாளர் கூட்டு அறிக்கை

ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடியின் பத்திரிக்கையாளர் கூட்டு அறிக்கை

ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடியின் பத்திரிக்கையாளர் கூட்டு அறிக்கை

ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடியின் பத்திரிக்கையாளர் கூட்டு அறிக்கை


மேதகு பிரதமர் அபே அவர்களே, செய்தியாளர்களே,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஜப்பான் பிரதமர் அபே அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். நமது நண்பரும், இந்திய ஜப்பானிய உறவை வரவேற்பவருமான அபே அவர்களுக்கு வரவேற்பு அளிப்பதில் மகிழ்ச்சி. ஜப்பானைப் போல, இந்தியாவின் பொருளாதார மாற்றத்துக்கு வேறு எந்த நாடும் உதவி புரிந்ததில்லை. இந்தியாவின் பொருளாதார கனவுகளை நனவாக்குவதில் வேறு எந்த நண்பரும் முக்கியமாக இருந்ததில்லை.

நமது உறவை விட வேறு உறவும், ஆசியாவின் பாதையைத் தீர்மானிப்பதிலும், பின்னிப் பிணைந்துள்ள நமது கடற்பகுதியை தீர்மானிப்பதிலும் பங்கு வகித்ததில்லை. இதனால் தான் நமது உலகளாவிய உறவை பெரிதும் மதிக்கிறோம். இந்தியாவில் இந்த உறவுக்கு பெரும் வரவேற்பும், அரசியல் ஆதரவும் உள்ளது.

அதே நேரத்தில் பொதுமக்களிடையே இது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியதுடன், நமக்கு பெரும் பொறுப்பையும் சுமத்தியிருக்கிறது. கடந்த ஆண்டில் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு நாம் பெரிதும் பாடுபட்டிருக்கிறோம். பொருளாதார கூட்டுறவிலும், பிராந்திய கூட்டுறவிலும், பாதுகாப்பு கூட்டுறவிலும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம்.

இந்தியாவிற்கென்று பிரத்யேகமான பல பொருளாதார திட்டங்களுக்கு பிரதமர் அபே அவர்கள் வரவேற்பு அளித்துள்ளார். இந்தியாவில் ஜப்பானிய தனியார் முதலீடும் அதிகரித்துள்ளன. நமது இணைந்த பயணத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். நாம் கையெழுத்திட்ட சிவில் அணுசக்தி ஒப்பந்தம் சாதாரண வணிக ஒப்பந்தம் மற்றும் தூய்மையான எரிசக்திக்கான ஒப்பந்தத்திற்கும் மேலானது.

ஒரு அமைதியான மற்றும் பாதுகாப்பான உலகை நோக்கிய பயணத்தில், இந்த ஒப்பந்தம் பரஸ்பர கூட்டுறவு மற்றும் நம்பிக்கைக்கான சிறந்த எடுத்துக்காட்டு. ஜப்பானின் இந்த முடிவின் முக்கியத்துவத்தை நான் அறிவேன். இந்த முடிவை நாங்கள் அதிகமாக மதிப்பதோடு, நமது பகிரப்பட்ட வாக்குகளை நிறைவேற்றுவோம் என்று உறுதி கூறுகிறேன்.

இதே போன்ற முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு முடிவுதான் வேகம், பாதுகாப்பு, நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கு பெயர்போன ஜப்பானின் ஷின்கான்சென் நிறுவனத்தின் அதிவேக ரயில்களை மும்பை – அகமதாபாத் இடையே அறிமுகப்படுத்தும் முடிவு.

இந்த முடிவுக்காக 12 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கும் பிரதமர் அபே அவர்களின் அசாதாரணமான முடிவை பெரிதும் வரவேற்கிறோம். இந்த முயற்சி, இந்திய ரயில்வே உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி, எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தை விரைவாக்கும். இந்தியாவின் பொருளாதார மாற்றத்துக்கான வாகனமாகும்.

ஜப்பானின் இருதரப்பு உதவித் திட்டங்களையும், மேக் இன் இந்தியா திட்டத்துக்காக ஜப்பானின் பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளின் முதலீடுகளையும் வரவேற்கிறோம்.

செப்டம்பர் 2014ல், டோக்யோவில் பிரதமர் அபே அவர்கள், அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் ஜப்பான் 35 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார். அது ஒரு லட்சியபூர்வமான அறிவிப்பு. ஆனால், அது தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பருவநிலை மாற்றம் குறித்து இருநாடுகளின் கூட்டுறவு உறுதியானது. சுத்தமான எரிசக்தி மற்றும் எரிசக்தி திறன் வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்த திட்டங்களை உருவாக்கும் வகையில் இரு நாடுகளுக்கும் கூட்டுறவு ஏற்பட்டுள்ளது.

நாம் கையெழுத்திட்ட இதர ஒப்பந்தங்கள், நமது கூட்டுறவின் ஆழத்தையும், பன்முகத்தன்மையையும் பறைசாற்றுகின்றன.

இன்று நமது பாதுகாப்பு தொடர்பாக இரு முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளோம். இந்த இரு ஒப்பந்தங்கள் நமது பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதோடு இந்தியாவில் பாதுகாப்பு உற்பத்தியை மேம்படுத்தும். இது பாதுகாப்பு அதிகாரிகளின் பேச்சுவார்த்தைகளை முப்படைகளுக்கும் விரிவுபடுத்துவதோடு மலபார் கடற்படை கூட்டு பயிற்சிகளில் ஜப்பானை பங்குதாரராக சேர்த்துக் கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நாம் நமது பிராந்திய உறவுகளையும் இந்த ஆண்டில் மேம்படுத்தியுள்ளோம். அமெரிக்காவுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதோடு, ஆஸ்திரேலியாவோடு புதிய பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேற்காசிய மாநாட்டில் இணைந்து பணியாற்றுவதோடு, பிராந்திய கடற்பாதுகாப்பு மற்றும் பிராந்திய கட்டுமானத்தை வளர்ப்பதற்கு இணைந்து செயல்படுவோம். விமான போக்குவரத்து மற்றும், கடல் வணிகத்துக்கான சுதந்திரத்தை பாதுகாக்க இந்தியா பாடுபடும். கடல் பகுதி சார்ந்த பிராந்திய சிக்கல்கள் சர்வதேச சட்டங்கள் மற்றும் கடல்சார் விதிகளுக்கு உட்பட்டும் அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா நம்புகிறது.

APEC அமைப்பில் இந்தியாவின் உறுப்பினர் சேர்க்கைக்கு ஜப்பான் பிரதமர் அபேவின் ஆதரவுக்கு இந்தியா நன்றி தெரிவித்துக் கொள்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழுவில் இந்தியா தனது உரிய இடத்துக்காக பாடுபடும்.

கலாச்சாரமும் மக்களுமே எந்த உறவுக்கும் உயிரூட்டுகிறார்கள். நமது அற்புதமான உறவுக்கு ஒரு மனிதத்தன்மை உண்டு. கியோட்டோ- வாரணாசி ஒப்பந்தம் அதற்கு உதாரணம். கடந்த ஆண்டு பிரதமர் அபே கியோட்டோவில் என்னை வரவேற்றார். இன்று மாலை அவருக்கு வாரணாசியின் புராதன பாரம்பரியத்தையும், அதன் நவீன எதிர்காலத்திற்கான திட்டத்தையும் காண்பிப்பேன்.

இறுதியாக நமது சிறப்பான உறவுக்கான அடையாளமாக, தொழில் சம்பந்தமாக வருபவர்களுக்கும் இதர ஜப்பானிய குடிமக்களுக்கும் இந்தியாவிற்கு வந்திறங்கியதும் விசா வழங்கும் திட்டத்தை 2016 1ந் தேதி மார்ச் முதல் அறிமுகப்படுத்த உள்ளோம். இது உலகெங்கும் வழங்கப்படும் எலக்ட்ரானிக் விசாவிலிருந்து மாறுபட்டதாகும்.

மேதகு பிரதமர் அவர்களே,

பரபரப்பான சந்திப்புகள் நிகழும் உலகில், வெகு சில சந்திப்புகளே வரலாற்றுச் சிறப்பினை பெற்று உறவுகளையே மாற்றி அமைக்கின்றன. உங்களின் வருகை அத்தகைய ஒன்று.

இந்திய ஜப்பான் கூட்டுறவின் தொலைநோக்குப் பார்வை 2025 என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் நாம் நமது மக்களின் வளத்தை மேம்படுத்தி, ஆசியாவின் நூற்றாண்டை நமது தொலைநோக்குப் பார்வையாலும், விழுமியங்களாலும் உருவாக்குவோம்.

நன்றி