டோக்கியோவில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் இந்திய-ஜப்பான் உறவின் பல்வேறு அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
தனக்கு அளிக்கப்பட பிரமாண்ட வரவேற்பிற்காக பிரதமர் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபெவிற்கும் ஜப்பான் மக்களும் நன்றி தெரிவித்தார். ஜப்பானில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு பிரதமர் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
இந்திய சமூகத்தினரை இந்தியாவின் தூதர்கள் என்று கூறிய பிரதமர் இந்தியாவில் முதலீடு செய்யுமாறும் தாய்நாட்டுடனான கலாச்சார உறவினை பேணிகாக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு செய்துள்ள சாதனைகள் குறித்து பேசிய பிரதமர், இந்திய தீர்வுகள்- உலகளாவிய பயன்பாடுகள் எனும் உத்வேகத்தோடு இந்தியா தொடர்ந்து பணிபுரிகிறது என்றார். அனைவரையும் உள்ளடக்கிய நிதி திட்டங்கள் குறிப்பாக மக்கள் நிதி திட்டம், ஆதார், மற்றும் இணைய பரிமாற்ற முறை தற்போது உலக நாடுகளால் பாராட்டப்படுகிறது.
பெரும் வெற்றிபெற்ற விண்வெளி திட்டம் மற்றும் வேகமாக வளர்ந்துவரும் இணைய உட்கட்டமைப்பு ஆகியவை குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் மின்னணு மற்றும் வாகன உற்பத்தி துறையில் இந்தியாவை சர்வதேச மையமாக மாற்றியுள்ளது.
புதிய இந்தியாவை வடிவமைப்பதற்காக ஸ்மார்ட் உட்கட்டமைப்பை ஏற்படுத்துவதில் ஜப்பான் ஆற்றிய பங்கு குறித்தும் பிரதமர் கூறினார். இந்தியா மற்றும் ஜப்பான் இடையே உள்ள உறவினை மேலும் வலுபடுத்த தொடர்ந்து பணியாற்றுமாறு பிரதமர் இந்திய சமூகத்தினரை கேட்டுக்கொண்டார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார்.
***
Had a delightful interaction with the Indian community in Japan.
— Narendra Modi (@narendramodi) October 29, 2018
The accomplishments of our diaspora make us very proud.
Talked at length about the rich history, robust present and strong future of India-Japan relations. https://t.co/9jdURuB6Il pic.twitter.com/BLiYLMepPq