ஜப்பான் – இந்தியா நாடாளுமன்ற உறுப்பினர்களின் நட்புறவுக் கழகத்தின் தூதுக்குழுவினர் இன்று பிரதமரை சந்தித்தனர்.
திரு. ஹிரோயுகி ஹொசோடா தலைமையிலான இந்தத் தூதுக்குழுவில் திரு. கட்சுயா ஒகடா, திரு. மஸஹாரு நககாவா, திரு. நவ்காசு டேகேமோட்டோ, திரு. யோஷியாகி வாடா ஆகியோர் இருந்தனர்.
இந்தத் தூதுக்குழுவினர் 2016 செப்டம்பர் அன்று ஜம்மு-காஷ்மீரில் உரியில் உயிரிழந்தவர்கள் குறித்து தங்கள் அனுதாபங்களை அவர்கள் தெரிவித்தனர்.
பயங்கரவாதத்தின் உலக அளவிலான அபாயத்திற்கு சர்வதேச ஒத்துழைப்பு, அரசு ஆதரவிலான பயங்கரவாத்தினை தனிமைப்படுத்த ஒருங்கிணைக்கந்த முயற்சிகளுக்கான பிரதமரின் அறைகூவலையும் இந்தத் தூதுக்குழு வரவேற்றது.
இந்தச் சந்திப்பின்போது 2014ஆம் ஆண்டில் ஜப்பானில் தான் மேற்கொண்ட வெற்றிகரமான பயணத்தையும், அப்போது ஜப்பான் – இந்தியா நாடாளுமன்ற உறுப்பினர்களின் நட்புறவுக் கழகத்துடன் கலந்துரையாடியதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். வரவிருக்கும் ஆண்டுகளில் பல துறைகளிலும் வலுவான ஒத்துழைப்பிற்கான அடித்தளத்தை இந்தியாவும் ஜப்பானும் நிறுவியுள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஜப்பானுக்கும் இந்தியாவிற்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்த ஜப்பானில் வலுவான ஆதரவு நிலவுகிறது என்றும் ஜப்பான் – இந்தியா நாடாளுமன்ற உறுப்பினர்களின் நட்புறவுக் கழகத்தின் தூதுக்குழுவினர் தெரிவித்ததோடு, உயர் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பு, குறிப்பாக அதிவேக ரயில்வே துறையில், ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் அவர்கள் வரவேற்றனர்.
2015ஆம் ஆண்டில் பிரதமர் அபே இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணம் நமது இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகளின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க அமைந்தது என்பதை நினைவு கூர்ந்த பிரதமர் விரைவில் ஜப்பானுக்கும் பயணம் மேற்கொள்ள ஆர்வமாக உள்ளதாகவும் தூதுக்குழுவினரிடம் தெரிவித்தார்.