வணக்கம்!
140 கோடி மக்களின் சார்பில் வாழ்த்துகளை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் என்ற தத்துவம் உலகின் பிற பகுதிகளுக்கு முன்பாகவே பழங்கால இந்தியாவின் பொதுவான அம்சமாக இருந்துள்ளது. நமது பழங்கால இதிகாசமான மகாபாரதத்தில், மக்களின் முதல் கடமை தங்களது தலைவரைத் தேர்ந்தெடுப்பது என்று விவரிக்கப்பட்டுள்ளது.
நமது புனிதமான வேதங்கள், ஆலோசனைகளின் அடிப்படையில், அதிகாரத்தை பயன்படுத்துவது குறித்து பேசுகின்றன. பழங்கால இந்தியாவில் குடியாட்சி அரசமைப்பு பற்றிய பல வரலாற்று குறிப்புகள் உள்ளன. அங்கெல்லாம் ஆட்சியாளர்கள் பரம்பரை அடிப்படையில் இல்லை. உண்மையில் இந்தியா, ஜனநாயகத்தின் தாயமாக உள்ளது.
பெரு மதிப்பிற்குரியவர்களே,
ஜனநாயகம் என்பது ஒரு கட்டமைப்பு மட்டுமல்லாமல், அது ஒரு உணர்வாகும். ஒவ்வொரு நபரின் தேவைகளும், ஆசைகளும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது ஜனநாயகம். அதனால் தான், இந்தியாவில் அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம். அனைவரின் நம்பிக்கை, அனைவரின் வளர்ச்சி என்ற வழிகாட்டும் தத்துவம் எங்களை வழி நடத்துகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என்பதே இதன் பொருளாகும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் பருவ நிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது, சேமிப்பு கட்டமைப்புகள் மூலம் நீரை சேமிப்பது அல்லது அனைவருக்கும் தூய சமையல் எரிபொருளை வழங்குவது என எந்த முயற்சியாக இருந்தாலும் இந்திய நாட்டு மக்களின் கூட்டு முயற்சியால் அது செயல்படுத்தப்படுகிறது.
கொவிட்-19 காலத்தில் இந்தியாவின் செயல்பாடுகள் மக்களால் வழிநடத்தப்பட்டது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசிகளை 200 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் நம் நாட்டு மக்களுக்கு செலுத்த முடிந்தது. தடுப்பூசி நட்பு முன்முயற்சியின் மூலம், பல லட்சக்கணக்கான தடுப்பூசிகள் உலக நாடுகளுக்கும் வழங்கி பகிர்ந்துகொள்ளப்பட்டது.
இதுவும் வசுதைவ குடும்பகம்- அதாவது ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற ஜனநாயக உணர்வால் வழிநடத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டது.
பெருமதிப்பிற்குரியவர்களே,
ஜனநாயகத்தின் நன்மைகள் பற்றி எடுத்துரைக்க அதிக விசயங்கள் உள்ளன. ஆனால், இதை மட்டும் நான் சொல்கிறேன். உலகளாவிய பல சாவல்கள் உள்ளபோதிலும் இந்தியா, வேகமாக வளர்ந்து வரும் புதிய பொருளாதார நாடாக உள்ளது. இதுவே உலக ஜனநாயகத்திற்கான சிறந்த விளம்பரமாகவும் அமைந்துள்ளது. ஜனநாயகம் இதை வழங்கும் என இது எடுத்துக்கூறுகிறது.
இந்த அமர்வுக்கு தலைமை வகிக்கும் தென் கொரிய அதிபர் திரு யுன் அவர்களுக்கு நன்றி.
அத்துடன், உங்களது வருகைக்காக சிறப்பு வாய்ந்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி.
மிக்க நன்றி
***
AD/PLM/RS/PKG
My remarks at the 'Summit For Democracy'. https://t.co/6EXuxlGyd6
— Narendra Modi (@narendramodi) March 29, 2023