Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

செஸ் சாம்பியன் கொனேரு ஹம்பி பிரதமரைச் சந்தித்தார்


செஸ் சாம்பியன் கொனேரு ஹம்பி பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தியாவிற்கு மிகுந்த பெருமையைத் தேடித் தந்ததற்காக அவரைப் பாராட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரது கூர்மையான அறிவாற்றல், அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவை தெளிவாகத் தெரிவதாகக் குறிப்பிட்டார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கொனேரு ஹம்பி வெளியிட்ட பதிவுக்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“கொனேரு ஹம்பியையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் விளையாட்டின் சிறந்த அடையாளம். ஆர்வமுள்ள வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக அவர் இருக்கிறார். அவரது கூர்மையான அறிவும், அசைக்க முடியாத உறுதியும் தெளிவாகத் தெரிகிறது. அவர் இந்தியாவுக்கு மகத்தான பெருமையைத் தேடித் தந்துள்ளதுடன் தனிச்சிறப்பை  எடுத்துரைத்துள்ளார்.

***************

PLM /KV