செஷல்ஸ் நாடாளுமன்றத்தின் 12 உறுப்பினர் கொண்ட பிரதிநிதிகள் புது தில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தனர். இந்தக் குழுவிற்கு நாடாளுமன்ற மக்களவை தலைவர் மேதகு பேட்ரிக் பிள்ளை தலைமை தாங்கினார். அரசு அலுவல் குழு தலைவர் மேதகு சார்லஸ் டி. கமர்மோண்டும் இக்குழுவில் இடம்பெற்று இருந்தார்.
இரு நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கு இடையே பரிமாற்றங்கள் அதிகரித்திருப்பதற்கு பிரதமர் வரவேற்பு தெரிவித்தார். இந்தியா மற்றும் செஷல்ஸ் இடையேயான துடிப்பான மற்றும் வலுவான உறவுகள் குறித்தும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தாம் மேற்கொண்ட செஷல்ஸ் பயணம் பற்றி நினைவுகூர்ந்த பிரதமர், அது இரண்டு நாடுகளுக்கிடையே ஆழ்ந்த ஒத்துழைப்பு அதிகப்படுத்தியிருப்பதாகக் கூறினார்.
இரண்டு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கிடையேயான பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான தமது கருத்துக்களை, குழுவினர் பிரதமரிடம் பகிர்ந்து கொண்டனர்.
நமது நாடாளுமன்றத்தின் மக்களவை தலைவரின் அழைப்பின் பேரில், செஷல்ஸ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் அலுவலகப் பயணமாக இந்தியா வந்துள்ளனர்.
***
A parliamentary delegation from Seychelles met the Prime Minister. pic.twitter.com/qw01SjEXui
— PMO India (@PMOIndia) August 10, 2017