Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

செழுமை மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை நோக்கிய நமது பயணத்தில் க்யூஎஸ் உலக எதிர்காலத் திறன்கள் குறியீட்டின் நுண்ணறிவுகள் மதிப்புமிக்கவை: பிரதமர்


கியூஎஸ் உலக எதிர்காலத் திறன்கள் குறியீட்டின் தரவரிசையில், டிஜிட்டல் திறன்களில் கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளைத் தாண்டி  இந்தியா 2-வது இடத்தைப் பிடித்திருப்பது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  கடந்த பத்து ஆண்டுகளாக, நமது இளைஞர்களைச் சுயசார்புடையவர்களாக மாற்றவும், செல்வ வளத்தை உருவாக்குவத்றகும் திறன்களை மேம்படுத்தவும் எங்களது அரசு பணியாற்றி வருகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். செழுமை மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை நோக்கிய இந்தப் பயணத்தில்  க்யூஎஸ் உலக எதிர்காலத் திறன்கள் குறியீட்டின் நுண்ணறிவுகள் மதிப்புமிக்கவை என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

க்யூஎஸ் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், மேலாண்மை இயக்குநருமான திரு நுன்சியோ குவாக்கரெல்லியின் சமூக ஊடக எக்ஸ் தள  பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில்  பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“இது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது!

கடந்த பத்து ஆண்டுகளாக, நமது இளைஞர்கள் தற்சார்பு பெறவும், செல்வத்தை உருவாக்கவும் உதவும் திறன்களை வளர்த்து, அவர்களை வலுப்படுத்த எங்கள் அரசு பணியாற்றி வருகிறது. புதிய கண்டுபிடிப்புகளுக்கும் தொழில்முனைவுக்குமான மையமாக இந்தியாவை மாற்ற தொழில்நுட்பத்தின் சக்தியையும் நாங்கள் பயன்படுத்தியுள்ளோம்.

செழுமை மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை நோக்கிய இந்தப் பயணத்தில்  க்யூ எஸ் உலக எதிர்கால திறன்கள் குறியீட்டின் நுண்ணறிவுகள் மதிப்புமிக்கவை.”

***

TS/PLM/RS/DL