Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் 18ம் ஆண்டு இந்திய-ரஷ்ய உச்சி மாநாட்டில் அதிபர் புதினைப் பிரதமர் மோடி சந்தித்தார்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் 18ம் ஆண்டு இந்திய-ரஷ்ய உச்சி மாநாட்டில் அதிபர் புதினைப் பிரதமர் மோடி சந்தித்தார்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் 18ம் ஆண்டு இந்திய-ரஷ்ய உச்சி மாநாட்டில் அதிபர் புதினைப் பிரதமர் மோடி சந்தித்தார்


பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இந்திய – ரஷ்ய நாடுகளுக்கிடையிலான 18வது ஆண்டு உச்சி மாநாட்டின்போது, ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினை இன்று சந்தித்துப் பேசினார்.

உச்சி மாநாட்டை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி , 2001ம் ஆண்டு குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு முதல் முறையாக வந்ததை நினைவுகூர்ந்து குறிப்பிட்டார். இந்தியவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நல்லுறவு பண்பாடு முதல் பாதுகாப்பு (Sanskriti se Suraksha) வரையிலானது என்று குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையில் 70 ஆண்டுகளாக இருந்து வரும் ராஜீய உறவுகள். பல்வேறு இரு தரப்பு உறவுகள், உலகளாவிய விவகாரங்களில் வலுவாக இருக்கும் நெருக்கத்தைக் காட்டுகின்றன.

இன்று வெளியிடப்பட்ட செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனம் பதற்றமான, ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டிய, ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளவேண்டிய தற்போதைய உலகச் சூழலில் ஸ்திரத்தன்மைக்கு ஓர் வலுவான அடையாளமாகத் திகழும். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பன்னாட்டுப் பொருளாதாரப் பேரவை (SPIEF) கூட்டத்தில் விருந்தினராக இந்தியா பங்கேற்பதன் மூலமும் அதில் நாளை பிரதமராகிய தான் (திரு. மோடி) உரையாற்றுவதும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுக்கு எரிசக்தி ஒத்துழைப்பும் மிக முக்கியமான அம்சமாகும். குறிப்பாக அணுசக்தி, ஹைட்ரோகார்பன், புதுப்பிக்கத் தக்க எரிசக்தி துறைகளில் இன்று நடந்த கருத்துப் பரிமாற்றங்கள், முடிவுகளின் மூலம் கணிசமாக வலுப்பெற்றுள்ளது. இது தொடர்பாக கூடங்குளம் அணுமின் திட்டத்தின் 5ஆவது மற்றும் 6ஆவது பிரிவு குறித்த உடன்பாட்டை அவர் சுட்டிக் காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில், வர்த்தகம் ஆகியவை குறித்த உறவை மேம்படுத்துவதில் தனியாரின் பங்களிப்பு குறித்து பிரதம மந்திரி வலியுறுத்தினார். 2015ம் ஆண்டில் இந்தியாவும் ரஷ்யாவும் மொத்தம் 1000 கோடி டாலர் அளவுக்கு முதலீட்டு இலக்கை நெருங்குகின்றன என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

போக்குவரத்து இணைப்பு கருத்தியல் குறித்து பேசிய பிரதம மந்திரி, சர்வதேச அளவில் வடக்கு தெற்கு போக்குவரத்து இணைப்பு தொடர்பாக இந்திய ரஷ்ய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து சுட்டிக் காட்டினார். அத்துடன், தொழில்முனைவுத் திறனைத் தொடங்கவும், ஊக்குவிக்கவும் தேவையான புதுமைகளுக்கான முயற்சிகள் குறித்தும் பிரதம மந்திரி குறிப்பிட்டார். மேலும், யுரேஷிய பொருளாதார ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக உடன்பாடு தொடர்பாக நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தைகள் குறித்தும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்திய ரஷ்ய நாடுகளுக்கு இடையில் நிரூபிக்கப்பட்ட ராஜீய உறவை வலியுறுத்திய பிரதம மந்திரி திரு. மோடி, “இந்திரா 2017” எனப்படும் இருநாடுகளுக்கும் இடையிலான முதல் பாதுகாப்பு கூட்டுச் சேவையைச் சுட்டிக் காட்டினார். காமோவ் 226 ஹெலிகாப்டர்கள் மற்றும் போர்க்கப்பல்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வது குறித்தும் பிரதமர் பேசினார். எல்லை கடந்த பயங்கரவாதப் பிரச்சினையில் இந்தியாவுக்கு ரஷ்யா நிபந்தனையற்ற ஆதரவு தர முன் வந்துள்ளதைப் பிரதமர் வரவேற்றார்.

ரஷ்யாவின் பண்பாடு குறித்து ஆழ்ந்த அறிவும் இந்தியாவில் இருப்பதையும், யோகா, ஆயுர்வேதம் போன்ர இந்தியாவின் முறைகள் குறித்து ரஷ்யா கொண்டுள்ள ஈடுபாடும் மிகுந்த திருப்தையை அளிக்கின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்திய – ரஷ்ய நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேம்படுவதற்கு ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் தலைமை ஏற்றிருப்பதை பிரதம மந்திரி திரு. நரேந்திரம மோடி வரவேற்றுப் பாராட்டினார்.

இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அண்மையில் மறைந்த அலெக்சாந்தர் கடாகின் பெயர் தில்லியில் ஒரு சாலைக்குச் சூட்டப்படும் என்று பிரதமர் அறிவித்தார். கடாகின் இந்தியாவின் சிறந்த நண்பராக விளங்கினார் என்றார் அவர்.

முன்னதாக இரு நாடுகளின் தொழிலதிபர்களின் கூட்டத்தில் பேசிய பிரதமர் திரு. நரேந்திரம மோடி இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியமான துறைகளில், குறிப்பாக மிக முக்கியான துறைகளில் முதலீடு செய்யும்படி ரஷ்ய தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்

அணுசக்தி, ரயில்வே, நவமணிக்கற்கள், நகைகள் ஆகிய தொழில்கள் தொடர்பாகவும் பாரம்பரிய அறிவு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றங்கள் தொடர்பாகவும் ஐந்து உடன்பாடுகளில் இந்தியாவும் ரஷ்யாவும் இன்று கையெழுத்திட்டன.

லெனின்கிராடில் நடந்த யுத்தத்தில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு பிஷ்கரோவ்ஸ்கியே சதுக்கத்தில் முன்னதாக பிரதம மந்திரி அஞ்சலி செலுத்தினார்.