Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

செயிண்ட் லூசியா பிரதமரை பிரதமர் மோடி சந்தித்தார்

செயிண்ட் லூசியா பிரதமரை பிரதமர் மோடி சந்தித்தார்


இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டின் இடையே, பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 20 அன்று செயிண்ட் லூசியா பிரதமர் திரு. பிலிப் ஜே. பியருடன் பயனுள்ள விவாதங்களை நடத்தினார்.

திறன் மேம்பாடு, கல்வி, சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கிரிக்கெட், யோகா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து தலைவர்கள் விவாதித்தனர். இந்தியா-கரிகாம் இடையேயான உறவை வலுப்படுத்துவதற்கான பிரதமரின் ஏழு அம்சத் திட்டத்தை பிரதமர் பியர் பாராட்டினார்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் எடுத்துரைத்தனர். குறிப்பாக சிறிய தீவு நாடுகளில் பேரிடர் மேலாண்மைத் திறன்கள் மற்றும் தாங்குதிறனை வலுப்படுத்துவதில் அவர்கள் கவனம் செலுத்தினர்.

***

(Release ID: 2075710)
TS/PKV/RR/KR