பிரதமர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அரசாட்சி முறையின் பல்வேறு துறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர செயலர்கள் குழு தங்களின் எண்ணங்களையும் யோசனைகளையும் பிரதமரிடம் பகிர்ந்து கொண்டனர். “ஆரோக்கியமான இந்தியா, கல்வி பெற்ற இந்தியா” என்ற திட்டத்திறகான எண்ணங்களையும் ஆலோசனைகளையும் பிரதமர் திரு. நரேந்திர மோடியிடம் செயலர்கள் பகிர்ந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர்கள் திரு. ராஜ்நாத் சிங், திரு. மனோகர் பாரிக்கர், நித்தி ஆயோக்கின் துணைத்தலைவர் திரு. அரவிந்த் பானகரியா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விளக்க காட்சிக்கு பிறகு பார்வையாளர்கள் பலர் ஆலோசனைகளை வழங்கினர்.
இதுவரை நான்கு செயலர்கள் குழு பிரதமரிடம் அறிக்கை வழங்கியுள்ளன.
Interacted with Secretaries, who shared innovative ideas on 'Swasth Bharat, Shikshit Bharat .' https://t.co/qchvkwCL6r
— Narendra Modi (@narendramodi) January 17, 2016