Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

செயற்கை நுண்ணறிவில்  முன்னிலை வகிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது: பிரதமர்


 

இந்திய தொழிலதிபர் திரு விஷால் சிக்கா, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பை ஒரு நுண்ணறிவுத் தொடர்பு என்று திரு மோடி குறிப்பிட்டார், மேலும் புதுமை மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, செயற்கை நுண்ணறிவில்  முன்னிலை வகிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றார். இருவரும் செயற்கை நுண்ணறிவு  மற்றும் இந்தியாவில் அதன் தாக்கம் மற்றும் வரவிருக்கும் காலத்திற்கான பல தேவைகள் பற்றிய விரிவான மற்றும் பரந்த விவாதத்தை நடத்தினர்.

விஷால் சிக்காவின் சமூக ஊடகப்  பதிவுக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது;

“இது உண்மையில் ஒரு நுண்ணறிவு கலந்துரையாடல். புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், செயற்கை நுண்ணறிவில்  முன்னிலை வகிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது’’.

***

PKV/KV