Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

செயற்கைக்கோள்களை விண்வெளியில்  ஒருங்கிணைக்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு


 

செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், விண்வெளித் துறையினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளிப் பயணங்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்று கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“செயற்கைக்கோள்களை ஒருங்கிணைப்பதை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோ (@isro) விஞ்ஞானிகளுக்கும், ஒட்டுமொத்த விண்வெளித் துறையினருக்கும் வாழ்த்துகள். வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.”

***

ST/PLM/RS/KV