Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

செமிகான் இந்தியா 2024-ஐ செப்டம்பர் 11 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்


உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் செமிகான் இந்தியா 2024- பிரதமர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 11, 2024 அன்று காலை 10:30 மணியளவில் தொடங்கி வைப்பார். இந்த நிகழ்ச்சியில் திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார்.

செமிகண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்த வேண்டும் என்பது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையாக இருந்து வருகிறது. இதற்கு இணங்க, செமிகான் இந்தியா 2024-
க்கு செப்டம்பர் 11 முதல் 13 வரை “குறைக்கடத்தி எதிர்காலத்தை வடிவமைத்தல்என்ற கருப்பொருளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 11 முதல் 13 வரை நடைபெறும் இந்த மூன்று நாள் மாநாடு, இந்தியாவை செமிகண்டக்டரின் உலகளாவிய மையமாக மாற்றுவதற்கான   செமிகண்டக்டர் உத்தி மற்றும் கொள்கையை வெளிப்படுத்தும். இதில் உலகளாவிய குறைக்கடத்தி நிபுணத்துவம் கொண்ட உயர்நிலை தலைவர்கள் பங்கேற்பார்கள். இம்மாநாடு உலகளாவிய தலைவர்கள், நிறுவனங்கள், குறைக்கடத்தி தொழில்துறையின் நிபுணர்களை ஒன்றிணைக்கும். இந்த மாநாட்டில் 250க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள், 150 பேச்சாளர்கள் பங்கேற்பார்கள்.

 

***

(Release ID: 2053241)

SMB/AG/RR