பிரதமர் திரு. நரேந்திர மோடி செப்டம்பர் 22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பாரத் மண்டபத்தில் ஜி 20 குழுவுடன் கலந்துரையாடுகிறார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார். உரையாடலைத் தொடர்ந்து இரவு உணவு வழங்கப்படும்.
இந்த கலந்துரையாடலில் ஜி 20 உச்சிமாநாட்டின் வெற்றிக்கு பங்களித்த சுமார் 3000 பேர் பங்கேற்க உள்ளனர். உச்சிமாநாட்டை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக அடித்தட்டு அளவிலிருந்து அனைத்து மட்டத்திலும் பணியாற்றியவர்கள் இதில் அடங்குவர். இதில் பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த கிளீனர்கள், ஓட்டுநர்கள், வெயிட்டர்கள் மற்றும் பிற ஊழியர்கள் அடங்குவர். இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.
***
AD/ANU/PKV/ KRS