Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைந்துள்ள அதிநவீன ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் சென்னையின் உள்கட்டமைப்பு வசதிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும்:பிரதமர்


சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைந்துள்ள அதிநவீன ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் சென்னையின் உள்கட்டமைப்பு வசதிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். திரு மோடி மேலும் கூறுகையில், இந்தக் கட்டிடம் இணைப்பு சேவை வசதிகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும், உள்ளூர் பொருளாதாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

விமானப்போக்குவரத்துத்துறை  அமைச்சகம் தனது ட்விட்டர் பதிவில், சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைந்துள்ள அதிநவீன ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை ஏப்ரல் 8-ம் தேதி அன்று  பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைக்கிறார் என தெரிவித்திருந்தது. 

விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் ட்விட்டுக்கு பதிலளித்த பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“இது சென்னையின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும். இது இணைப்பு சேவை வசதிகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும், உள்ளூர் பொருளாதாரத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

***

AD/GS/RJ/KPG