Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சென்னை வானொலியில் “மனதின் குரல்“ நிகழ்ச்சி பொதுமக்கள் தங்கள் கருத்துக்களையும் செய்திகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் வேண்டுகோள்


பிரதமர் திரு நரேந்திர மோடி வானொலியில் மனதின் குரல் (மன் கீ பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம் ஒருமுறை பொதுமக்களுடன் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு உரையாடுகிறார். இந்நிகழ்ச்சி இம்மாதம் வரும் 25ந்தேதி நாடு முழுவதும் வானொலியில் ஒலிபரப்பப்படும்.

இந்த நிகழ்ச்சிக்காக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமருடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புபவர்கள் https://mygov.in/groupissue/give-your-inputs-pime-ministers-mann-ki-baat-25th-october-2015/ என்ற முகவரியில் பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் குரல் பதிவுகளை 1800-3000-7800 என்ற கட்டணமில்லா தொலைபேசி இணைப்பு வாயிலாகவும் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என்று பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகும் மனதின் குரல் நிகழ்ச்சி 13வது அத்தியாயம் ஆகும். ஞாயிறு காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகும்.

நாடெங்கும் உள்ள அனைத்து வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் நிகழ்ச்சி நேரடியாக ஒலிபரப்பாகும். மேலும் பிரதமர் அலுவலகம், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் தொலைகாட்சி செய்திப்பரிவு ஆகியவற்றின் யூடியூப் அலைவரிசைகளிலும் நேரடியாக அஞ்சல் செய்யப்படும். இந்த நிகழ்ச்சியின் மொழிபெயர்ப்பு 2015 அக்டோபர் 25ந்தேதி இரவு 8 மணிக்கு பிராந்திய வானொலி நிலையங்களின் அலைவரிசைகளில் ஒலிபரப்பாகும்.

••••••